நெடுவாசல் மக்களை நிம்மதி இழக்கச் செய்த ஹைட்ரோ கார்பன் திட்டம், தற்போது திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது. அதனால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி இப்பகுதி மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக இரவு பகல் பாராமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகத் தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், காவிரி உரிமை மீட்புக்குழு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு... உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டினம் வரை 400 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இப்போராட்டத்தில், ‘இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதுகுறித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர். பாரதிச்செல்வன், “திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலம் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியானதைப் பார்த்துத்தான் இப்பகுதி மக்கள் சுதாரித்துள்ளார்கள். ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம்’ எனப் பொதுவான பெயரில் சொல்லப்பட்டாலும்... இதுவும் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி ‘ஷேல் கேஸ்’ எடுக்கும் திட்டம்தான். ஏல அறிவிப்பில் இப்பகுதிகள் ‘ஷேல் பாறைப்பகுதி’ (Sedimentary Basin) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தங்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துபோகும்’ என்ற பதைபதைப்போடு இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ‘இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தமிழக அரசு அனுமதிக்காது’ என உறுதிமொழி அளித்துள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் உறுதிமொழி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க, இந்த உறுதிமொழி மட்டும் போதாது. தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி... ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை’ எனக் கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட வேண்டும். அடுத்தகட்டமாகச் சட்டம் இயற்ற வேண்டும்.

‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷ’னுக்கு மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி, மீத்தேன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில்... அதனைத் தடுக்கக் கடந்த 2105-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்க அனுமதி இல்லை’ என அரசாணை வெளியிட்டார்.

அதைப் பின்பற்றித் தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

- கு. ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஷ்குமார்