Published:Updated:

மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான் - தக்க பதிலடிகொடுத்த இந்தியா!

மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான் - தக்க பதிலடிகொடுத்த இந்தியா!
மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான் - தக்க பதிலடிகொடுத்த இந்தியா!

கிராம மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்திய ராணுவத்தினர் கொடுத்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கப் பயிற்சி முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதிகாலை நடைபெற்ற இந்த அதிரடித் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய விமானப்படை வீரர்களின் வீர்தீரச் செயலைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் பாராட்டிவருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது. கிராம மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, ரஜோரி பகுதியில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இதில், இந்திய வீரர்கள் 5 பேர் லேசான காயமடைந்தனர். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இதனால், எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது.