Published:Updated:

`புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரி வியாபாரம்!’ -கொதித்தெழுந்த பெண்கள்

`புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரி வியாபாரம்!’ -கொதித்தெழுந்த பெண்கள்
`புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரி வியாபாரம்!’ -கொதித்தெழுந்த பெண்கள்

'புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரியை உடனே தடை செய்ய வேண்டும்' என்று கூறி, கையில் தாலிக்கயிற்றுடன் வந்த பெண்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

`புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரி வியாபாரம்!’ -கொதித்தெழுந்த பெண்கள்

அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தடைசெய்யப்பட்ட கேரள மூன்று எண் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. பெட்டிக்கடைகளிலும் தாராளமாக லாட்டரி விற்பனை நடக்கிறது. தினசரி கூலி வேலைபார்க்கும் தொழிலாளர்கள், வருமானத்தின் பாதிப் பணத்தை லாட்டரி சீட் வாங்கி தோற்றுப்போகின்றனர். சில ஏழைத் தொழிலாளர்கள், மூன்று எண் லாட்டரி சீட்டில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற பேராசையில், கடன் வாங்கி சீட்டு போடுகின்றனர். கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. பல குடும்பங்களின் வாழக்கையைச் சீரழித்து, பெண்களின் தாலி அறுக்கும் மூன்று எண் லாட்டரி சீட்டு  விற்பனையைத் தடைசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசினோம்,  "முன்னெல்லாம், கூலிவேலை செய்து வரும் பணத்தில், டாஸ்மாக் போயிட்டு மீதமுள்ள பணத்தையாவது வீட்டுக்குத் தருவார்கள். இப்ப அதுவும் இல்லை. சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் டாஸ்மாக், மூன்று எண் லாட்டரியில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

`புதுக்கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும் மூன்று எண் லாட்டரி வியாபாரம்!’ -கொதித்தெழுந்த பெண்கள்

குடும்பத்துக்கு ஏதும் கொடுக்கிறதில்லை. போதாக்குறைக்கு வீட்டில் உள்ள பொருள்களையும் திருடி அடகு வைத்து,  சூதாட்டத்தில் அழிக்கின்றனர். அந்த அளவுக்கு அடிமையாகியுள்ளனர். குடும்பத்திற்கு இவர்களால் எந்தப் பலனும் இல்லை. இதனால், பிள்ளைங்களோட  தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்றனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இதில் கலந்துகொண்டு மனு அளித்தனர்.