Published:Updated:

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக கேரளாவில் போராட்டம்

திருவனந்தபுரம்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஶ்ரீசாந்துக்கு ஆதரவாக அவரது சொந்த மாநிலமான கேரளாவில் போராட்டம் நடைபெற்றது. 

ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்திற்கு எதிராக கேரளா உள்பட நாட்டின் பல இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவரது பெற்றோரும் உறவினர்களும் அவர் குற்றமற்றவர் என்று கூறிவருகிறார்கள். இப்புகாரில் இருந்து ஸ்ரீசாந்த் மீண்டு வருவார் என்று அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதற்காக கொச்சியில் ஸ்ரீசாந்தின் சகோதரர் தீபு தலைமையில் அவரது உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்ற போராட்டம் நடந்தது. கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் நடந்த இப்போரட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

##~~##
அவர்கள் கையில் “சாரி ஸ்ரீசாந்த்...மீண்டு வருவாய்!",  "நாங்கள் உன்னோடு இருக்கிறோம்" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனையும் செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் தாம் ஈடுபட்டது உண்மைதான் என விசாரணையில் ஶ்ரீசாந்த் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.