Published:Updated:

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...
பிரீமியம் ஸ்டோரி
News
பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

தொடரும் விவசாயிகள் போராட்டம்!

சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்குத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த ஜூன் 1-ம் தேதி டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால், கோபம் அடைந்த சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வீடுகளிலும், வயல்களிலும் கறுப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதோடு விவசாயிகள் வாயில் கறுப்புக் கொடியைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கே போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

சேலம் மாவட்டத்தில் எட்டுவழி பசுமைச் சாலை துவங்கும் அரியானூர், உத்தமசோழபுரம் தொடங்கி நாழிக்கல்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர் எனப் பல கிராமங்களில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டங்களில் விவசாயிகள், குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு ‘எங்கள் உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று ஆவேசமாகப் பேசி, தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இப்பசுமைச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட சேலம் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவகாமி, ‘‘எங்களுக்கு 5 ஏக்கர் நெலம் இருக்கு. அந்த நெலத்தை நம்பிதான் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்துட்டு இருக்கு. இது எங்களுக்கு மட்டுமல்ல, எங்க கொழந்தைங்க, கால்நடைகள் எல்லோருக்கும் வாழ்வாதாரமாக இருக்கு. இந்த நெலத்தை எங்களிடமிருந்து பிடுங்கினா கால்நடைகளை ஓட்டிகிட்டு எங்கே போவோம். எட்டு வழிச்சாலைத் திட்டம் அறிவித்ததிலிருந்தே காட்டுல விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு உளவியலாகப் பாதிக்கப்பட்டிருக்கோம். ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

முன்ன, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மூலம் மகிழ்ச்சி அடைஞ்சோம். ஆனா, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பது, எங்களை மன நோயாளியாகும் அளவுக்கு மாத்தியிருக்கு. இதனால, நிம்மதி இழந்து காட்டுல வேலை செய்ய முடியாம, தினம் தினம் போராடி தவிக்கிறோம். விவசாயத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எங்க உயிரைக் கொடுத்தாவது, தடுத்து நிறுத்துவோம்’’ என்றார் ஆவேசம் பொங்க.

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், ‘‘இது மக்களுக்கான திட்டமில்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கிருக்கும் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கவும், ஆட்சியாளர்கள் கமிஷன் பெறுவதற்குமே பயன்படும். இதன் மூலம் சேலம் - சென்னைக்கு 60 கி.மீ குறையும்னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்க் கூசாமல் பொய் பேசுறார். இது முதல்வருக்கு அழகல்ல. அவர் சொல்வதுபோல 60 கி.மீ குறையும்னு நிரூபிச்சா, என்னோட 6 ஏக்கர் நிலத்தை அரசுக்கு இலவசமாக எழுதிக் கொடுக்கிறேன்’’ என்று சவால்விட்டார்.

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை விவசாயிகள் தரப்பிலிருந்து கவனித்து வரும் வழக்கறிஞர் பிரபு ராமசுப்ரமணியன், “சேலம்- சென்னை எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்திற்கான மேல்முறையீட்டு மனு கடந்த ஜூன் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் இந்து மல்ஹோத்ரா, எம்.ஆர்.ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ‘இத்திட்டத்திற்காக எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக நிலம் கையகப்படுத்த முயன்றிருக்கிறீர்கள் இது சரிதானா’ என்று கண்டிப்போடு கேட்டு எட்டுவழிப் பசுமைச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத் தடையும் கொடுக்க மறுத்துவிட்டார். ஆரம்பத்திலேயே விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். நிச்சயம் உச்ச நீதிமன்றம் சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும் சாதகமாகவே தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார் நம்பிக்கையுடன்.

- கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்