Published:Updated:

வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி

வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி
வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி

ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் தவறாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டதால், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சமூகத்தினர் ஈடுபட்ட வன்முறைச் சம்பவங்களால் கலவர பூமியாக மாறிய பொன்னமராவதி, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்துகள் வழக்கம்போல ஓடத் தொடங்கியுள்ளன.

வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி

ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தவறாகச் சித்திரித்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகவே, தவறாகச் சித்திரித்ததாகக் கூறப்படும் அந்தச் சமூகத்தினர், வீடியோ வெளியிட்டவர்களை உடனே கைதுசெய்யக் கோரி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த சமூகத்தினர், பொன்னமராவதி காவல் நிலையத்திற்குள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில் 3 போலீஸார் மற்றும் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. பொன்னமராவதி மட்டுமில்லாமல் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி

திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடியோ வெளியிட்டவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனக் கூறினர். பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 49 கிராமங்களில் 21-ம் தேதி நள்ளிரவு வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தாலுகா முழுவதும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதனால், அனைத்து கிராமங்களிலும் அமைதியான சூழ்நிலையே நிலவியது.

வாட்ஸ்-அப் அவதூறு வீடியோ விவகாரம்! - இயல்பு நிலைக்குத் திரும்பிய பொன்னமராவதி

மருத்துவமனைகள், மருந்தகங்கள் உட்பட அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. பொன்னமராவதி பேருந்து நிலையப் பணிமனையில் இருந்து வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் வதந்திகளை சமூக வலைதளங்களின் மூலமாகவோ, வாய் மூலமாகவோ பரப்ப வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்திவருகின்றனர்.