Published:Updated:

மூன்று மாதமாக சம்பளப் பணம் இழுத்தடிப்பு - பண்ணைத் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம்

மூன்று மாதமாக சம்பளப் பணம் இழுத்தடிப்பு - பண்ணைத் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம்
மூன்று மாதமாக சம்பளப் பணம் இழுத்தடிப்பு - பண்ணைத் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம்

புதுக்கோட்டையில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் பண்ணைகளில் பண்ணைத் தொழிலாளர்களுக்கு ரூ.251 என்று வழங்கப்படும் கூலியை ரூ.375ஆக உயர்த்தி வழங்கக் கோரியும், 3 மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பளப் பணத்தை வழங்கக் கோரியும் பண்ணைத் தொழிலாளர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மாதமாக சம்பளப் பணம் இழுத்தடிப்பு - பண்ணைத் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், வெள்ளாவிடுதி மாநில எண்ணெய் வித்துப் பண்ணை, குடுமியான்மலை அண்ணா பண்ணை, வம்பன் பயிறு வகை பண்ணைகளில் சுமார் 750 பேர் தினக் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடியும் கூலி உயர்வு ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த 3 மாதங்களாக சம்பளப் பணமும் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பண்ணைத் தொழிலாளர்கள் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் பண்ணைத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலுவையில் உள்ள பணத்தை சில தினங்களில் வங்கியில் வரவு வைப்பதாகவும், கூலி உயர்வு குறித்து பரிசீலித்து நிறைவேற்றுவதாகவும் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மூன்று மாதமாக சம்பளப் பணம் இழுத்தடிப்பு - பண்ணைத் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரசப்பன் கூறும்போது, `பலரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுக்கோட்டையில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளில் தினக் கூலிப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அதற்கு அரசு செவிசாய்க்க மறுக்கிறது. தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்து வரும் சிலர் நிரந்தத் தொழிலாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைத் தொழிலாளர்கள் யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இங்கு பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் இதில் வரும் கூலியை வைத்துக்கொண்டே பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், நிலுவை வைத்தே கூலி வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது. தற்போது தொழிலாளர்களுக்கு உள்ள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்.