Published:Updated:

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்
`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாகவும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவரையும், பிற ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதில் பரிபஹா பேனர்ஜி என்ற மருத்துவருக்கு மண்டை ஓட்டில் பலத்த அடிபட்டது. 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அங்குள்ள அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நடந்த கைகலப்பில் மேலும் சில மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இதன்பிறகு மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக வெடித்தது.

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

முதலில் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம் பின்னர் மேற்குவங்க மாநிலம் முழுவதும் பரவியது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார் முதல்வர் மம்தா. இருந்தும் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் ஆவேசமான மம்தா,  ``போராட்டம் நடத்தப்படும் மருத்துவர்களுக்கு 4 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் அவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பணி இழக்கும் சூழலும் உருவாகும்” என எச்சரித்தார். 

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

அவ்வளவுதான் போராட்டம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மம்தா மருத்துவர்களை மிரட்டுகிறார் என அனைவரும் குற்றம்சாட்டினர்.  ‘தன் கருத்துகளுக்காக மம்தா மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். அவர் மன்னிப்பு கோரினால் எங்கள் போராட்டம் கைவிடப்படும்’ என மேற்குவங்க மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், மம்தா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். 

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

இன்று காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் காலை 8 முதல் மாலை 6 மணிவரை போராட்டம் நடத்துகின்றனர். தனியார் நிறுவன மருத்துவர்கள் இன்று ஒரு நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மம்தாவைக் கண்டித்து மேற்குவங்கத்தில் உள்ள 300 அரசு மருத்துவர்கள் தங்களின் வேலைகளை ராஜினாமா செய்துள்ளனர். இன்று பிற்பகல் மூன்று மணிக்குப் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தினரை நேரில் சந்திக்கவுள்ளார் மம்தா பானர்ஜி.

இந்தச் சம்பவம் பற்றியும் காயமடைந்த மருத்துவர் பரிபஜா பேனர்ஜியின் உடல் நிலை பற்றியும் இந்தியா டுடே பத்திரிகையிடம் அவரின் உறவினரும் மருத்துவருமான சஞ்ஜித் சாட்டர்ஜி கூறுகையில், ``நானும் ஒரு மருத்துவர்தான். நானும் என்.ஆர்.எஸ் கல்லூரியில்தான் படித்தேன். மம்தா தன் அகந்தையைச் சற்று தள்ளிவைத்துவிட்டு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மருத்துவர் பானர்ஜி தாக்கப்பட்டது என்.ஆர்.எஸ் மருத்துவமனையில். தற்போது அவர் ஐ.எம்.கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

மம்தா பானர்ஜி இதுவரை என்.ஆர்.எஸ் மருத்துவமனைக்கோ, அடிபட்ட மருத்துவரையோ சந்திக்கவில்லை. மாறாக தன் வீட்டுக்கு அருகில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு மட்டும் சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்துள்ளார். மம்தா தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தங்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்றுதான் பயிற்சி மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மம்தாவின் எச்சரிக்கை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால்தான் பயிற்சி மருத்துவர்கள் முதல் மூத்த மருத்துவர்கள் வரை என அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும், மாநில உள்துறை அமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு நான் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்கிறேன், தயவு செய்து சற்று இறங்கிவந்து மருத்துவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேளுங்கள். மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக பலமுறை இதேபோன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. மருத்துவர்கள் தாக்கப்படுவது நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

`ஒரே ஒரு கோரிக்கைதான்; தயவுசெய்து காது கொடுத்துக் கேளுங்கள்!'- மம்தாவை வலியுறுத்தும் மருத்துவர்கள்

தொடர்ந்து, ``காயமடைந்த மருத்துவர் பரிபஹா பேனர்ஜியின் பெற்றோர் வயதானவர்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால் அவர்கள் வீட்டில் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியை நிறுத்திவைக்கும்படி நான் கேட்டுள்ளேன். இருந்தும் அவர்கள் வீட்டைச் சுற்றி பத்திரிகையாளர்களும் பொதுமக்கள் எப்போதும் இருந்துகொண்டே உள்ளனர். மருத்துவர் பானர்ஜி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் முழுவதுமாக குணமடைந்துவிடுவார்.

பானர்ஜி உயிரிழந்துவிட்டதாகப் பலர் வதந்தி பரப்புகின்றனர். அது முற்றிலும் பொய்யானது. தகவல் தெரியாமல் வதந்தி பரவுவதை தடுக்க வேண்டும். காயமடைந்த பானர்ஜிக்கு இதுவரை எங்கள் செலவில் சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்கும் மேல் ஏதேனும் சிகிச்சை அளிக்க நேர்ந்தால் எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” எனப் பேசியுள்ளார். 

News Credits : India today

Vikatan