Published:Updated:

`ஊதியம் பெறுவது ஊராட்சியில்; வேலை செய்வது ஆட்சியர் வீட்டில்!' - கொதிக்கும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்

ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 5 பேரை மாவட்ட ஆட்சியர், தன் வீட்டில் பணியாற்ற வைப்பதால் சுகாதாரப் பணியில் தேக்கம் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

`ஊதியம் பெறுவது ஊராட்சியில்; வேலை செய்வது ஆட்சியர் வீட்டில்!' - கொதிக்கும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்

கிராமப்புற ஊராட்சி ஊழியர்களுக்கு அரசாணையின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`ஊதியம் பெறுவது ஊராட்சியில்; வேலை செய்வது ஆட்சியர் வீட்டில்!' - கொதிக்கும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள்

மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் பேசும்போது, ``7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துப்பரவுப் பணியாளர்களுக்கு உள்ளாட்சி நிதியில் இருந்துதான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர், ஊராட்சியில் சம்பளம் வாங்கும் துப்புரவுப் பணியாளர்கள் 5 பேரை தன் வீட்டில் துப்புரவு வேலைக்குப் பயன்படுத்துகிறார். நகராட்சி ஆணையர், நகராட்சி அதிகாரிகள் போன்றவர்களும் தங்கள் சொந்த வேலைக்கு துப்புரவுப் பணியாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல, தாழ்த்தப்பட்டோர் அல்லாத சாதியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள், வேலை செய்யாமலேயே கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சம்பளம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால், குறைவான எண்ணிக்கையிலான துப்புரவுப் பணியாளர்களே சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் கடும் வேலை நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர்.

ஆனால், துப்புரவு பணியாளர்களுக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கும் மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு, 7-வது ஊதியக்குழு பரிந்துரை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே, 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Vikatan