Published:Updated:

‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி
‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

"காவிரிக் கரையோர பகுதியில்கூட சரியான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத அரசாக ஆளும் தமிழக அரசு இருக்கிறது" என்று கரூரில் செந்தில் பாலாஜி அதிரடியாகக் குற்றம் சாட்டிப் பேசினார்.

‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி


 கரூரில் இருந்துவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யாத தமிழக அரசையும், கரூர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அரவக்குறிச்சித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

அப்போது அவர் கூறுகையில், "காவிரிக் கரையோர கிராமங்களுக்குக்கூட முறையான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத ஒரு கையாலாகாத அரசாக, ஆளும் அ.தி.மு.க மாநில அரசு இருக்கிறது. மக்கள், சாலை ஓரங்களில் காலி குடங்களுடன் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், மக்களின் நிலை தெரியாமல் 'குடிநீர் தட்டுப்பாடு கரூரில் இல்லை' என பேட்டி அளிக்கிறார். மாவட்ட ஆட்சியர் காவிரிக் கரையோரம் உள்ள வாங்கல், சோமூர், நெரூர், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை என்னோடு இணைந்து பார்வையிடத் தயாரா... 

‘ஆளுங்கட்சி நடத்துன மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வற்றியது’ - கரூர் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரைகளில் ஆளுகட்சியினர் நடத்திய மணல் கொள்ளை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து, பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணமாய் அமைந்துவிட்டது. இதற்குக் காரணமான, செயல்படாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். அப்பொழுதுதான் கரூர் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் விடிவுகாலம் கிடைக்கும். மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கும். சேலம் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலைக்கு, ரூபாய் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மக்கள் விரும்பாத திட்டத்தைச் செயல்படுத்த எடப்பாடி அரசு முயல்கிறது. ஆனால், போர்கால அடிப்படையில் செயல்படவேண்டிய தமிழக அரசு, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வெறும் 200 கோடி அளவில் ஒதுக்கீடு செய்துள்ளது. 'யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டால் பசி தீருமா' அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இருக்காது" என்றார்.
 

Vikatan