Published:Updated:

‘4 வழிச் சாலை திட்டத்துக்குச் சுமுக தீர்வு’ - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு

Four way Road

‘4 வழிச் சாலை திட்டத்துக்குச் சுமுக தீர்வு’ - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு
‘4 வழிச் சாலை திட்டத்துக்குச் சுமுக தீர்வு’ - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு

நான்கு வழிச் சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நேற்று தொடங்கிய தொடர் காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘4 வழிச் சாலை திட்டத்துக்குச் சுமுக தீர்வு’ - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை தேவையான நிலத்தை அளவிட்டுள்ளனர். ஆனால் நிலத்திற்கு உரிமையான விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டி நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி தங்கள் நிலத்தைத் தர முடியாது என்று மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக  போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி, விவசாயிகளிடம் நேற்றுமுன் தினம் நடத்திய அமைதிப்  பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. எனவே, திட்டமிட்டபடி நேற்று முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை ஆக்கூரில் தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குக் காவல்துறை தடை விதித்திருந்தது.

பதற்றமான இச்சூழ்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி,மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 18 - ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சுமுகமாக பேசி முடிக்கலாம் என்று உறுதி தந்தனர். அதுவரை சாலை விரிவாக்கப் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் விவசாயிகளின் போராட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Vikatan