Published:Updated:

வேலை நிறுத்தம் எதிரொலி: புதுச்சேரிக்கு நாளை தமிழக லாரிகள் செல்லாது

வேலை நிறுத்தம் எதிரொலி: புதுச்சேரிக்கு நாளை தமிழக லாரிகள் செல்லாது
வேலை நிறுத்தம் எதிரொலி: புதுச்சேரிக்கு நாளை தமிழக லாரிகள் செல்லாது
வேலை நிறுத்தம் எதிரொலி: புதுச்சேரிக்கு நாளை தமிழக லாரிகள் செல்லாது

நாமக்கல்: புதுச்சேரியில் நாளை லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் தமிழகத்தில் இருந்து லாரிகள் அம்மாநிலத்துக்கு இயக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு லாரிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் அடிப்படை வசதி செய்யக் கோரியும், சரக்கு பெட்டக வசதி செய்து தரக் கோரியும் புதுச்சேரியில் நாளை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரியில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று (16ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய நல்லதம்பி, தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு நாளை லாரிகள், சரக்கு வேன்கள் இயக்கப்பட மாட்டாது என்றார்.

##~~##
போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் லாரிகள் செல்லாது என்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நல்லதம்பி கூறினார்.
இதனிடையே, புதுச்சேரிக்கு சரக்கு புக்கிங் செய்வது இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.