Published:Updated:

புதுச்சேரியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

விகடன் விமர்சனக்குழு
புதுச்சேரியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
புதுச்சேரியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்காக ஒதுகப்பட்ட போக்குவரத்து முனையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தங்களுக்கே திருப்பி தர வேண்டும். போக்குவரத்து முனையத்தில் செயல்படும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி சரக்கு லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் உண்ணாவிரத மற்றும் முழு அடைப்பு போரட்டங்களையும் மேற்கொண்டனர். இதையடுத்து இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர் புதுச்சேரி சரக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தினர்.

##~~##
இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன், லாரி உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள முனையத்தில் அடிப்படை வதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, 'தற்காலிகமாக மேட்டுப்பாளையம் முனையத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியதோடு, உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உமையாளர்கள்  வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.