Published:Updated:

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

Vikatan Correspondent
வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!
வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

சென்னை: ஓடும் ரயிலில் குதித்து மாணவன் பலியானதற்கு காரணமான டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி, திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்ற ரயிலில் இன்று காலை 9.30 மணிக்கு மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது, டிக்கெட் பரிசோதகர் மாணவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

அப்போது  பட்டாபிராமில் அறை எடுத்து தங்கி படித்து வரும் மாணவன் ராமனுக்கும்,   டிக்கெட் பரிசோதகர் ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் டிக்கெட் பரிசோதகர் மாணவன் ராமனின் சட்டையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது  நிலை தடுமாறிய மாணவன், தண்டவாளத்தில் விழுந்ததில் இரண்டு கால்களும் துண்டானது. உடனடியாக மாணவன் ராமன் அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மாணவன் ராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

இதனால், ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி ரயில் மறியல் செய்தனர். இதனால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவன் ராமனை டிக்கெட் பரிசோதகர் ராமமூர்த்தி தள்ளிவிட்டதாகவும், இதில் மாணவன் உயிரிழந்ததாகவும், மாணவரின் சாவுக்கு காரணமான டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணி நேரமாக அரக்கோணம்- திருவள்ளூர்- சென்னை மார்க்கம் மற்றும் சென்னை- திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கம் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்!

ஒரு மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் இலேசான தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதைத் தொடர்ந்து ரயில் சேவை தொடங்கியது. மாணவர்கள் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பயணிகள் ஜன்னல்களை மூடினர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.