Published:Updated:

ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

சென்னை: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை கண்டித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

மே 17 இயக்கம்

ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த கொள்கையையே தற்போது பாஜகவும் தொடர்வதாக மே 17 இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். இதே நிலை தொடருமானால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே பாஜகவிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.

இலங்கை அரசுடன் இந்திய அரசு கைக்கோர்த்தால் அதனை தமிழ்ச்சமூகம் ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்தனர்.

சட்டக்கல்லூரி  மாணவர்கள் 


அதேப்போன்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து திருவள்ளூரில் ரயில் மறியல் செய்த சட்டக்கல்லூரி  மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.25 மணிக்கு திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது.

அப்போது திடீரென்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய படி ரயிலை நோக்கி ஓடினார்கள்.ரயில் என்ஜின் மீது ஏறி நின்றபடி ரெயிலை போகவிடாமல் மறித்தனர்.ராஜபக்சேவுற்கு அழைப்புவிடுத்த மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். சர்வதேச விசாரணைக்கு ராஜபக்சே ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் இலங்கை தூதரகத்தை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்

இந்நிலையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.