Published:Updated:

திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

Vikatan Correspondent
திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!
திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி விவசாயிகள் கடந்த 14 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் (18ஆம் தேதி) முடிவடைகிறது.

திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரத கிஷான் விவசாய சங்கத்தினர் திருச்சியில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் விதவிதமான முறையில் நூதன முறையில் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

முதல் நாள் அரை நிர்வாண போராட்டமும், இரண்டாவது நாளில் நெற்றியில் நாமம் போட்டும், மூன்றாவது நாள் உடலில் பட்டை மற்றும் உத்திராட்சை கொட்டை அணிந்தும், நான்காவது நாள் குல்லா அணிந்தும், 5ஆம் நாள் வாயில் கருப்பு துணியுடன் அரை நிர்வாண போராட்டமும் என விதவிதமான நூதன போராட்டத்தை நடத்தியவர்கள் கடந்த 11ஆம் தேதி பாடைகட்டி ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று (18ஆம் தேதி) தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர்.

திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

இதுகுறித்து, பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ''தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை வங்கிகள் கைவிட வேண்டும், கரும்பிற்கான நிலுவை தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை ஆளுங்கட்சியோ, அதிகாரிகளோ, எதிர்கட்சியினரோ எங்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை கேட்கவில்லை.

திருச்சி விவசாயிகளின் 14 நாள் போராட்டம் இன்றுடன் முடிவு!

விவசாயிகளுக்கு உரிய விலை வழங்காமல் மத்திய, மாநில அரசுகள் குறைந்த விலையே வழங்கி வருகிறது. இதை அரசுக்கு உணர்த்தவே போராட்டம் நடத்தி வருகிறோம். கடைசி நாளான இன்று தூக்கு கயிறு போராட்டம் நடத்தி உள்ளோம். அனைத்து கடன்களை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகம் முன் விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வழியில்லை'' என்றார்.

இந்த போராட்டத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வந்தவண்ணம் உள்ளதால் அளவுக்கு அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர்.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்