Published:Updated:

நாகை, காரைக்கால் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!

Vikatan Correspondent
நாகை, காரைக்கால் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!
நாகை, காரைக்கால் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!
நாகை, காரைக்கால் மீனவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்!

நாகப்பட்டினம்: நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி, சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பூம்புகார், வானகிரி, புதுக்குப்பம் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (18ஆம் தேதி) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நாகை மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, வரும் 25ஆம் தேதிக்குள் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து, மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இருப்பினும், தங்களின் வேலை நிறுத்தம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.