Published:Updated:

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

விகடன் விமர்சனக்குழு
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

கடலூர்: மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 33 நாட்களாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், தற்காலிக பணியாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் இன்று (5ஆம் தேதி) மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.