Published:Updated:

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சீர்திருத்தம்: தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்  சீர்திருத்தம்: தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு!
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சீர்திருத்தம்: தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு!
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்  சீர்திருத்தம்: தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு!

கல்பாக்கம்: அணு சக்தி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்படும் சீர்திருத்தத்துக்கு, தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு  தெரிவித்துள்ளது.

தேசிய அணு ஆற்றல் ஊழியர்கள் சம்மேளத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில்,தேசியக் கருத்தரங்கம் நடை பெற்றது.

இதில் ஊழியர்கள்  சம்மேளத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.வி. ஜெயராஜ் பேசும்போது, "கதிரியக்கச் சூழலில் பணிபுரிவது மிக மிக ஆபத்தானதாகும். இதனால் ஊழியர்களின் பாதுகாப்புக்காக எல்லாவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தவிர்க்க முடியாத சூழலில் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களின் பாதுகாப்புக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் சி.எச்.எஸ்.எஸ். என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அணுசக்தித் துறை செலவினத்தைக் காரணம் காட்டி இத்திட்டத்தைச்  சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிக்க முயற்சி நடை பெற்று வருகிறது.ஊழியரின் மனைவி, குழந்தைகள், பெற்றோருக்கு மருத்துவம் அளிக்க தற்போது பிடிக்கும் பணத்தை 15 மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் உள்ள லஞ்ச முறைகேடுகளை ஒழித்து தேவையற்ற செலவினங்களைக் குறைத்து திட்டத்தை செழுமைபடுத்தினால் அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடியும்" என்றார்.

இதில் நாடு முழுவதிலும் உள்ள அணுசக்தி நிலையங்களில் இருந்து 24 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணுபுரம் நகரிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அணுசக்தி ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இக்கருத்தரங்கில்  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்க இணைப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.