Published:Updated:

அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை உண்ணாவிரதம்: அண்ணா ஹஜாரே திட்டவட்டம்

புதுடெல்லி, ஆக.24,2011

அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை உண்ணாவிரதம்: அண்ணா ஹஜாரே திட்டவட்டம்

லோக்பால் மசோதா விவகாரத்தில் தங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹஜாரே திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி, அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் இன்று 9-வது நாளாகத் தொடர்ந்தார்.

ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த மக்கள் முன்பு காலை 11 மணியளவில் சிற்றுரையாற்றிய அண்ணா ஹஜாரே, "நாடு முழுவதும் உள்ள மக்கள் ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர். இது 9-வது நாள். நான் நலமுடன் இருக்கிறேன்.

அரசுடன் நேற்றும் நம் மக்களில் மூவர் பேச்சு நடத்தினர். ஆனால், ஊழலை ஒழிக்க கூடிய எண்ணம் இப்போது கூட அரசுக்கு எழவில்லை. ##~~##

லோக்பால் மசோதாவில் 3 முக்கிய பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த 3 பிரச்னைக்கும் தீர்வு எட்டப்படும் விதமாக, நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.

கிராமம் முதல் மத்திய அமைச்சகம் அவரை அனைத்து அதிகாரிகளும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்," என்றார் அண்ணா ஹஜாரே.

இதன் தொடர்ச்சியாக, ஹஜாரே தரப்பைச் சேர்ந்த ஒருவருடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தினார். இதில் தீர்வு காணப்படாத 3 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் குர்ஷித் கூறுகையில், "லோக்பால் மசோதா நிறைவேறுவதை விட அண்ணா ஹஜாரேவின் உடல்நலம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்," என்றார்.

யஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்..

இதனிடையே, அண்ணா ஹஜாரேவின் வலுவான லோக்பால் மசோதாவுக்கு பிஜேபி ஆதரவளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஆதரவளிக்கத் தவறினால் தமது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் பிஜேபி மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

முன்னதாக, ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹஜாரேவை பிஜேபி எம்.பி. வருண் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "ஹஜாரேவின் லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செயய்ப்பட வேண்டும்," என்றார்.

ஹஜாரே உடல் நிலை...

ஹஜாராவின் உடல்நிலையை இன்று பரிசோதித்த மருத்துவக் குழு, அவருக்கு குளுக்கோஸ் கொடுக்க ஆலோசனை வழங்கினர். அதனை அண்ணா மறுத்த நிலையில், அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்..

அண்ணா ஹஜாரே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு