Published:Updated:

பேச்சு வார்த்தை தோல்வி: டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடரும்!

விகடன் விமர்சனக்குழு
பேச்சு வார்த்தை தோல்வி: டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடரும்!
பேச்சு வார்த்தை தோல்வி: டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடரும்!
பேச்சு வார்த்தை தோல்வி: டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடரும்!

சென்னை: எரிவாயு டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இடையே போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் டேங்கர் லாரிகளுக்கான வாடகை நிர்ணயம் குறித்து 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு முதல் கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 3,200 டேங்கர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், எண்ணெய் நிறுவனங்கள், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, வேலை நிறுத்தம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.