Published:Updated:

காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை திருமணம்!

காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை  திருமணம்!
காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை திருமணம்!
காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை  திருமணம்!

திருப்பூர்: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நாய் மற்றும் கழுதைக்குத்  திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியினர் கைது செய்யப் பட்டனர்.

ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி,  உலக காதலர்  நாளாக மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போல இந்தியாவிலும் காதலர்  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனால் ஆண்டு தோறும் காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இந்தியாவில் வலுத்து வருகிறது.

குறிப்பாக இந்து முன்னணி போன்ற மத அமைப்புகள்  காதலர் தினம் கலாசார சீரழிவு என்றும், இது இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் நாய் - கழுதைக்குத்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நாய் மற்றும் கழுதை அழைத்துவரப்பட்டன.

இந்து முன்னணி மாநில நிர்வாகக்  குழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ்வரன், கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர், நாய்  - கழுதைக்கு  திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் உணவு மற்றும்  குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மொய் எழுதப்பட்டது.

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிந்ததும்  திருமணத்தை நடத்தி வைத்த மற்றும் கலந்து கொண்ட 63 இந்து முன்னணியினரைக்  கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல கோவை கவுண்டம்பாளையம் பேருந்து  நிலையத்தில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக்  கொண்டாடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.