Published:Updated:

ஐஐடி மாணவர் அமைப்பு தடைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களின் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்ததற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஐஐடி வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
 
ஐஐடி மாணவர் அமைப்பு தடைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்ததற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெரியாரின் சிந்தனைகளை ஐஐடிக்குள் பரப்பக் கூடாது என்று முழக்கமிட்டதோடு, சென்னை ஐஐடிக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்ததற்கு எதிராக ஒரு பக்கம் போராட்டமும், மறு பக்கம் ஆதரவாக போராட்டமும் நடைபெற்றதால் சென்னை ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு