Published:Updated:

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!
கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

சேலம்: கல்லூரி மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

சேலத்தில் உள்ள ஸ்ரீசாரதா மகளிர் உடற்பயிற்சி கல்லூரி 1982ம் ஆண்டு தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட கல்லூரி. தற்போது, B.PED மற்றும் M.PEDக்கு 24 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக கேட்கிறார்கள். அரசும் போதுமான  ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கல்லூரியை மூட போவதாக அறிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதைக்கண்டித்து சேலம் மாணவர் சங்கத்தினர் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “33 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியளித்த கல்லூரியை திடீரென்று மூடுகிறோம் என்று சொன்னல் எப்படி..?  சேவைக்காக தொடங்கப்பட்ட கல்லூரி என்றால் ஏன் மூட வேண்டும்...? அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மூடப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கோ, சமூகத்திற்கோ நல்லது கிடையாது.

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

இதுபோன்ற நடவடிக்கைகளால் தனியார் மையத்தை  வளர்த்து, கட்டண கொள்ளை நடத்தவே இது வழிவகுக்கும், எனவே தமிழக அரசு ஸ்ரீ சாரதா கல்லூரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கி போதிய ஆசிரியர்களை நியமித்து கல்லூரியை காப்பாற்ற வேண்டும்'' என்று கோஷமிட்டனர்.

கல்லூரியை மூடுவதற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைந்து போகுமாறு கூறினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

எம்.புண்ணியமூர்த்தி


படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு