Published:Updated:

கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!

கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!
கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!

கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணனுக்கு எதிராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்,  5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போரட்டம் நடத்தி வருகின்றனர். இதில், தமிழகம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் சேகரனிடம் பேசினோம்.

''கிராம நிர்வாக அலுவலர்கள், குடவாசல் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட சங்க கட்டடம் கட்ட ஏற்பாடு செய்து பணிகளையும் ஆரம்பித்தனர். ஆனால், கலெக்டர் மதிவாணன் கட்டடம் கட்டுவதை தடுத்தார். நாங்கள் அனுமதி கேட்டு நீதிமன்றத்துக்கு போனோம். கட்டடம் கட்டும் பணிகளை தொடர வேண்டாம், கட்டடத்தை இடிக்கவும் வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி கலெக்டர் மதிவாணன்,  கட்டபட்ட 13 பில்லர்களை இடிக்க செய்தார். நாங்கள் இது சம்பந்தமாக வருவாய்த்துறை அமைச்சர்  உதயகுமாரிடம் முறையிட்டோம். அவரும் கலெக்டரிடம் பேசினார். அப்படியும் பிரச்னை முடியவில்லை. எங்களை நீதிமன்றத்திலேயே பார்த்து கொள்ளுமாறு அமைச்சரிடமே கூறிவிட்டார் கலெக்டர் மதிவாணன்.

கலெக்டருக்கு எதிராக விஏஓக்கள் உண்ணாவிரதம்!

மேலும், பழி வாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறவிருந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலை முதல் நாள் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் அவர் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகினார். கிராம நிர்வாக அலுவலர் வட்ட சங்க அலுவலகம் கட்ட கலெக்டர் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்கும்போது, அவர் எங்களிடம் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார் என நினைக்கிறோம். அப்படி நாங்கள் பணம் கொடுத்தால் இந்த பிரச்னை முடிந்து விடும் என எண்ணுகிறோம். இதையெல்லாம் கண்டித்துதான் நாங்கள் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.

கலெக்டர் தரப்பிலோ, ''கிராம நிர்வாக அலுவலர்கள்தான் கலெக்டருக்கு எதிராக செயல்படுகின்றனர். கலெக்டர் பெயரை பயன்படுத்தி 'மதி கெட்ட மதிவாணன்' என போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்கள். இதை யார்தான் பொறுத்து கொள்வார்கள்?'' என்று மட்டும் முடித்து கொண்டனர்.

-கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு