Published:Updated:

விலை உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டம்: மா.கம்யூ.

Vikatan Correspondent

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில், அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

பால் விலை, பேருந்து கட்டண உயர்வு உயர்வை திரும்ப பெறவேண்டும்; மக்களை கடுமையாக பாதித்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைத்து மட்ட ஊழலை எதிர்த்தும், அனைவருக்கும் நிலம், வேலை, உணவு, இருப்பிடம், சுகாதாரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும்;

தமிழக அரசு அறிவித்துள்ள மக்கள் நலத் திட்டப் பயன்கள் அனைத்தும் பயனாளிகள் அனைவருக்கும் கிடைத்திடவும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் கிடைத்திடவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.