Published:Updated:

ஹரியானா: தீவிரமடைகிறது ஜாட் சமூகத்தினரின் போராட்டம்

விகடன் விமர்சனக்குழு
ஹரியானா: தீவிரமடைகிறது ஜாட் சமூகத்தினரின் போராட்டம்
ஹரியானா: தீவிரமடைகிறது ஜாட் சமூகத்தினரின் போராட்டம்
ஹரியானா: தீவிரமடைகிறது ஜாட் சமூகத்தினரின் போராட்டம்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போல், தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, ஜாட் சமூகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டுவரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

ஹரியானாவில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால், பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை விடுவிக்காவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, ஹிசார், சிர்ஸா உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. ஹிசாரில் போலீசாருடன் நடந்த மோதலில், 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.