Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Vikatan Correspondent
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து,  ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று திரும்பப் பெறப்பட்டது. ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் இம்முடிவை அறிவித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதி மொழியை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.