Published:Updated:

அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை: பயணிகள் புகார்

அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை: பயணிகள் புகார்
அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை: பயணிகள் புகார்
அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை: பயணிகள் புகார்

நெல்லூர்: தீ விபத்து நடைபெற்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து ஏற்பட்டபோது  அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்று அதில் பயணித்த பயணிகள் புகார்  தெரிவித்துள்ளனர்.

நெல்லூரில் தீ விபத்துக்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்,இன்று காலை 11.45  மணி அளவில் சென்னை வந்தடைந்தது.எஸ் 11 பெட்டியில் பயணம் செய்து,விபத்தில்  லேசான காயத்துடன் உயிர் தப்பிய 12 பேரும் இந்த ரயிலில் சென்னை வந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,"ரயில்வே துறை மீது சரமாரி  புகார் தெரிவித்த அவர்கள், குறிப்பாக, தீ விபத்து நிகழ்ந்தபோது, மற்ற பெட்டிகளில்  இருந்து தாங்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த  முயன்றதாகவும், அது வேலை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

மேலும், கதவுகள் இரண்டு புறமும் திறக்க முடியாதபடி அடைபட்டுக் கிடந்ததாகவும்  அவர்கள் கூறினர்.

"நாங்கள் பயணித்த பெட்டியில் அதிகாலை தீப்பிடித்துக் கொண்டது.இதனால் என்ன  செய்வது என்று தெரியவில்லை.பதற்றத்தில் சிலர் ஜன்னல் வழியாக மிகுந்த சிரமத்துக்கு  இடையே கீழே குதித்தனர்.ரயில் பெட்டியின் இரு கதவுகளையும் திறக்க முடியவில்லை.  அதைத் திறக்க முடிந்திருந்தால் மேலும் பலர் உயிர் தப்பியிருக்கலாம். கதவு ஏன்  அவ்வாறு இருக மூடிக் கொண்டது தெரியவில்லை.

##~~##
எங்களது பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலிகளை இழுத்து ரயிலை நிறுத்த  முயன்றோம். ஆனால் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை.இதனால் பக்கத்துப்  பெட்டிகளில் இருந்தோர் அபாயச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த  உதவினர். உதவி கோரி நீண்ட நேரம் குரல் எழுப்பியும்,யாரும் வரவில்லை. ஒரு மணி  நேரம் கழித்தே மீட்புக் குழுவினர் வந்தனர்.இதனாலும் உயிரிப்பு அதிகரித்து விட்டது"  என்று அவர்கள் மேலும் கூறினர்.
டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு  எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர்  அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர்  தூரத்தில் எஸ்-11 வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 32  பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 20 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட்து.