Published:Updated:

புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தம்!

புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தம்!
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தம்!
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தம்!

சென்னை: பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னையில் உள்ள தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், 3  நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ருதி,  பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே  விழுந்து பலியானாள்.

இதையடுத்து,தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் அதிகாரிகளால்  சோதனையிடப்பட்டது. தகுதியில்லாத ஏராளமான வாகனங்களின் அனுமதி ரத்து  செய்யப்பட்டன.தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.

தற்போது பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.இதனால்  சென்னையில் சுமார் 15,000 தனியார் பள்ளி வாகனங்கள் இன்று ஓடவில்லை.

##~~##
இதுகுறித்து தனியார் பள்ளி வாகனங்கள் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு  பொதுச்செயலாளர் பெஞ்சமின் கூறுகையில்,"பள்ளி வேன்களில் 12 குழந்தைகளைத்தான்  ஏற்றிச் செல்லவேண்டுமென்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.20 குழந்தைகளையாவது  ஏற்றிச் செல்லாவிட்டால் எங்களுக்கு கட்டுப்படியாகாது.
இதுபோல், ஆட்டோக்களில் 3 குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்லவேண்டும்  என்கிறார்கள். இதை வைத்து ஆட்டோ டிரைவர்கள்  பிழைக்க முடியாது. இதுபோல்  பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

நியாயமான கோரிக்கைகளை  நாங்கள் ஏற்க தயார்.எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்  அரசு இதில் தலையீட்டு உடனடியாக நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று  வலியுறுத்துகிறோம்” என்றார்.