Published:Updated:

``கோயில்களைப் பராமரிக்காமல் அழிப்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் குறிக்கோள்" - ஹெச்.ராஜா

கொரோனா டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாது, கோயில்களைத் திறப்பதால் பரவும் என்பது திமுக அரசின் இந்து விரோத போக்கைக் காட்டுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்கக்கோரி பாஜக சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயில்களுக்கு பக்தர் வர தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாஜக முன்னாள் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, சிறுபான்மை பிரிவு அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம், மாநில மகளிரணித் தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக
பாஜக

இதில் வேலூர் இப்ராஹிம், ``ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டு உரிமையைத் தடுப்பது தவறானது. இதனால் தான் சமூகத்தில் பல்வேறு தவறுகள் நடக்கின்றன. மனநிம்மதியைத் தரக் கூடிய கோயில்களுக்கு வர தடைவிதித்துவிட்டு, பெண்களின் தாலியைப் பறிக்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளனர். கொரோனா டாஸ்மாக் கடைகள் மூலம் பரவாது, கோயில்களைத் திறப்பதால் பரவும் என்பது திமுக அரசின் இந்து விரோத போக்கைக் காட்டுகிறது. இந்து மதத்தைப் புண்படுத்தும் நோக்கில் பேசிவிட்டு சிதம்பரம் கோயிலில் வழிபடும் திருமாவளவன் மதநல்லிணக்கவாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். அவர் இன்னொரு முறை இந்து கடவுள்களையும், இந்துகளின் நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசினால் அவருக்கு சேலைக்கட்டும் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன்" என்று பேசினார்.

"அண்ணாமலை என்ன கடவுளா?" - பரவும் ஆடியோ; விழுப்புரம் பாஜக தலைவர் கலிவரதனைச் சுற்றும் சர்ச்சை!
பழனியில் ஆர்ப்பாட்டம்
பழனியில் ஆர்ப்பாட்டம்

அதன் பிறகு பேசிய ஹெச்.ராஜா, ``இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களில் தற்போது 20 சதவிகிதம் கோயில்கள் இல்லை. பல கோயில்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பேசினால் அறநிலையத்துறை அதிகாரிகள் என் மீது புகார் அளிக்கின்றனர். கோயில்களைப் பராமரிக்காமல் அழிப்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் குறிக்கோள். அதன்படி, தமிழகத்தில் 7 ஆயிரம் கோயில்களை இந்துவிரோத கழகங்கள் அழித்துள்ளன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு