Published:Updated:

கரூர்: `இடித்த கோயிலைக் கட்டித் தரலை!' - சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போராடிய மக்கள்
போராடிய மக்கள் ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சி வருவாய் அதிகாரிகள், சுங்கச்சாவடி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் சார்பில், `கோயில் அமைக்க இடத்தை ஒதுக்கி, பூசாரி பெயரில் எழுதித்தரணும்' என்று கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக மதுக்கான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவில், கரூர் டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டிப்பட்டிகோட்டையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுங்கச்சாவடியை அமைக்க, கடந்த 2009-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

போராடிய மக்கள்
போராடிய மக்கள்
நா.ராஜமுருகன்
கரூர்: `அமராவதி ஆற்றைப் பார்க்க அமைச்சர் தயாரா?’ - சவால்விடும் சமூக ஆர்வலர்கள்

அப்போது, அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட தெத்துப்பட்டி கிராம மக்கள், ஐந்து தலைமுறையாகப் பயன்படுத்திவரும் பெருமாள் கோயிலை இடித்து, சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி
ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி
நா.ராஜமுருகன்

இடிக்கப்பட்ட பெருமாள் கோயிலை அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த தெத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெருங்களத்தூர், வேலன் செட்டியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஐந்து தலைமுறையாக வழிபட்டுவருகின்றனர். அதோடு, அந்தப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா கொண்டாடப்பட்டுவந்தது.

`கொள்ளையர்களுடன் போராடிய சுங்கச்சாவடி காவலாளி!' -அதிகாலையில் நடந்த சென்னை கொடூரம்

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக இடிக்கப்பட்ட அந்தக் கோயிலை கட்டித் தராமல் தனியார் சுங்கச்சாவடி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் காலதாமதப்படுத்திவருவதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தனர். கடந்த டிசம்பர் 15-ம் தேதி தலித் விடுதலை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் ராஜகோபால், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, மதுக்கான் என்ற அந்த தனியார் நிறுவனம் சம்பந்தப்பட்ட கோயில் நிலத்துக்கு அருகேயுள்ள நிலத்தை, வேறு ஒரு தனிநபருக்கு விற்க முடிவுசெய்து பணியைத் தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆண்டிப்பட்டிக் கோட்டை சுங்கச்சாவடி முன்பு கோயில் இருந்த இடத்தில் வழிபாடு நடத்தியும், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

போராடிய மக்கள்
போராடிய மக்கள்
நா.ராஜமுருகன்

இதற்கிடையே, அரவக்குறிச்சி வருவாய் அதிகாரிகள், சுங்கச்சாவடி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் சார்பில், `கோயில் அமைக்க இடத்தை ஒதுக்கி, அதை பூசாரி பெயரில் எழுதித் தரணும்' என்று கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்வதாக மதுக்கான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய, தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கருப்பையா, ``கடந்த 2009-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, நிலங்களைக் கையகப்படுத்தி சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டிக் கோட்டை மதுக்கான் தனியார் சுங்கச்சாவடி அருகே, தெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்குச் சொந்தமான ஸ்ரீபெருமாள் சுவாமி திருக்கோயிலை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். அந்தக் கோயிலை இடிக்கும்போது, மாற்று இடத்தில் கோயில் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், 2009 இறுதியில் இடிக்கப்பட்ட இந்தக் கோயில் மீண்டும் அம்மக்களுக்கு கட்டி கொடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனம் கோயிலைக் கட்டித் தரவில்லை.

கருப்பையா
கருப்பையா
நா.ராஜமுருகன்

இதனால், விடுதலை இயக்கம் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் கோயில் அமைக்க ஒன்றே முக்கால் சென்ட் இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்திருக்கிறது. ஆனால், எங்கே இடம், எங்கே ஒதுக்குகிறார்கள் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அதோடு, எழுத்துபூர்வமாகவும் இன்னும் தெரிவிக்கவில்லை. எழுத்துபூர்வமாக அந்த இடத்தை ஒதுக்குவதற்கான அனுமதியைத் தெரிவித்து, மாற்று இடத்தில் கோயில் அமைய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சுங்கச்சாவடியில் அமர்ந்து, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனமும் செல்லாதவாறு மறித்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு