Published:Updated:

``குவாரிகளோட அத்துமீறலால வாழவே முடியலை..." - கிராமத்தைவிட்டு வெளியேறிய மக்கள் தொடர் போராட்டம்!

கிராமத்தைவிட்டு வெளியேறி ‘டென்ட்’ அமைத்துள்ள கிராம மக்கள். ( ச.பிரசாந்த் )

"லாரிகள்ல எம்.சாண்டு, கல் கொண்டு போறதால, தினம் வீட்டுக்குள்ள மண், துாசியா வருது. குழந்தைங்க, பெரியவங்க மூச்சுவிடவே சிரமப்படுறாங்க. இரவெல்லாம் வெடிவெக்கிறாங்க. குவாரிகளோட அத்துமீறலால இங்க வாழவே முடியலை."

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, ஏழு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதாக’, மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாகப் புகார் தெரிவித்துவருகின்றனர்.

லாரிகளால் ரோடுகள் சேதமடைந்து வருவதாகவும், அவ்வப்போது விபத்து நடப்பதாகவும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதுடன், விளைநிலங்கள் பாதிப்பதாகக் கூறி, ஆடு, மாடுகளுடன் சப் – கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம், சாலைமறியல் எனப் பல போராட்டங்களை நடத்தினர்.

‘டென்ட்’ அமைத்துள்ள பகுதியில் சமைக்கும் மக்கள்.
‘டென்ட்’ அமைத்துள்ள பகுதியில் சமைக்கும் மக்கள்.
ச.பிரசாந்த்

இந்த நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த 11-ம் தேதி ஒட்டுமொத்த கிராம மக்களும் கிராமத்தைவிட்டு வெளியேறி, 2 கி.மீ தொலைவிலுள்ள புறம்போக்கு நிலத்தில் ‘டென்ட்’ அமைத்து தங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று, 15-ம் தேதி, 5-வது நாளாக போராட்டம் நடத்தினர். மாலை 6:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், கொரட்டகிரி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தைவிட்டு வெளியேறி ‘டென்ட்’ அமைத்துள்ள கிராம மக்கள்.
கிராமத்தைவிட்டு வெளியேறி ‘டென்ட்’ அமைத்துள்ள கிராம மக்கள்.
ச.பிரசாந்த்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில், ``லாரிகள்ல எம்.சாண்டு, கல் கொண்டு போறதால, தினம் வீட்டுக்குள்ள மண், தூசியா வருது. குழந்தைங்க, பெரியவங்க மூச்சுவிடவே சிரமப்படுறாங்க. இரவெல்லாம் வெடிவெக்கிறாங்க. குவாரிகளோட அத்துமீறலால இங்க வாழவே முடியலை. ஒரு நாள்கூட நிம்மதியா துாங்க முடியலை. அதிகாரிங்களோட இன்னைக்கு (15-ம் தேதி) நடந்த பேச்சுவார்த்தையில, கமிட்டி அமைச்சு விசாரிச்சு நடவடிக்கை எடுப்போம்னு கலெக்டர் சொன்னாரு. எங்களுக்கு இதுல துளியும் உடன்பாடு இல்லை.

எங்க கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தைக் கைவிட மாட்டோம். முதல்வர் இந்தப் பிரச்னையில தலையிட்டு சீக்கிரம் ஏழு குவாரிகளையும் நிரந்தரமா மூடணும்” என வருத்தம் கலந்த கோபத்துடன் தெரிவித்தனர்.