Election bannerElection banner
Published:Updated:

பாரத் பந்த்: வேதாரண்யத்தில் டிராக்டர், மாட்டுவண்டிகளுடன் நடந்த போராட்டம்!

மாட்டு வண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்
மாட்டு வண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்

விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக வேதாரண்யத்தில் டிராக்டர், மாட்டுவண்டிகளுடன் ம.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து,  டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 13-வது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுவருகின்றனர். நாகை மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

குக்கிராமங்களில்கூட கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பந்த்-தில் மட்டும்தான் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர கிராமத்துப் பெண்களும் பங்கேற்ரிருக்கிறார்கள். புரெவி புயல், அதனால் ஏற்பட்ட கனமழை, உயிரிழப்புகள், சம்பா பயிர்கள் மூழ்கியது, வீடுகள் பாதிப்பு என இத்தனை சோகத்துக்கு மத்தியில் நாடு தழுவிய முழு அடைப்புக்கு நாகை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

மாட்டுவண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்
மாட்டுவண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்

இந்தச் சூழ்நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இன்று தமிழகமெங்கும்  களத்தில்  இறங்கியிருக்கிறார்கள். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் டிராக்டர் மற்றும்  மாட்டுவண்டிகளுடன், விவசாயத் தொழிலாளர்கள் புடைசூழ ம.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகளுடன் அமைதிகாத்த விவசாயிகள்! - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்  ம.ஜ.க பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினார்.

மாட்டுவண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்
மாட்டுவண்டிகளுடன் ம.ஜ.க. போராட்டம்

அதைத் தொடர்ந்து வணிகர்கள் அடுத்தடுத்து கடைகளை அடைத்து ஆதரவளித்தனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு