Published:Updated:

``ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு; ரத்து செய்யலைன்னா, பள்ளிக்கு வர மாட்டோம்!” - மாணவர்கள் போராட்டம்

போராட்டம்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்காவிடில், பள்ளிக்கு வர மாட்டோம் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு; ரத்து செய்யலைன்னா, பள்ளிக்கு வர மாட்டோம்!” - மாணவர்கள் போராட்டம்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்காவிடில், பள்ளிக்கு வர மாட்டோம் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போராட்டம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள குண்ணாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தர் மருதை (59). இவர், தோகைமலை அருகே பொம்மநாயக்கன்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாகத் திட்டி, தவறான நோக்கத்துடன் அவர்களைத் தொட்டதாகப் புகார் எழுந்தது. அது தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி லாரா புகார் அளித்தார்.

மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
நா.ராஜமுருகன்

அவர் அளித்த அந்தப் பாலியல் புகாரின் அடிப்படையில், ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் மருதை மீது வழக்கு பதிவுசெய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவரை நேற்று கைதுசெய்தனர். இந்த நிலையில், ஆசிரியர் மருதை கைதுசெய்யப்பட்ட தகவலறிந்த, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், திடீரென ஆசிரியர் மருதைக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசிரியரைப் பொய் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதனால், அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர்.

ஆட்சியர், எஸ்.பி அமைதிப் பேச்சுவார்த்தை
ஆட்சியர், எஸ்.பி அமைதிப் பேச்சுவார்த்தை
நா.ராஜமுருகன்

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் நடத்தும் இந்தப் போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோர் கவனத்துக்குச் செல்ல, உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் சிலர், "அறிவியல் ஆசிரியர் மருதை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். இவர்மீது எந்த ஒரு ஒழுக்கமற்ற முறை மற்றும் பாலியல் குறித்த புகார் இதுவரை வந்ததில்லை. இந்தப் பள்ளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியை, ஆசிரியர் மருதை மீதான தனிப்பட்ட ஈகோ பிரச்னைக்காக, அவரைப் பழிவாங்க இப்படி மாணவிகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால், வேண்டுமென்றே மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்மீது தவறான புகார் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி எழுதி வாங்கியிருக்கிறார்.

பள்ளியில் ஆட்சியர்
பள்ளியில் ஆட்சியர்
நா.ராஜமுருகன்

'இதை உங்களுடைய பெற்றோர்கள், வெளியிலுள்ள நண்பர்கள் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்' எனக் கூறி பாலியல் புகார்க் கடிதம் எழுதி வாங்கி, அதைவைத்து ஆசிரியர் மருதை மீது தலைமை ஆசிரியை பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே, நல்ல, நேர்மையான ஆசிரியரைக் கைதுசெய்துள்ளனர். அவர் மீதுள்ள புகாரைத் திரும்பப் பெற்று, ஆசிரியரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்" என்று எச்சரித்தனர்.

ஆனால், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலோ, ``தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரிலும், மாவட்ட சைல்டு லைன் விசாரணை செய்து பெற்ற புகாரின் அடிப்படையிலும் தற்போது ஆசிரியர் மருதை போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருசில பெற்றோர்கள் வேண்டுமென்றே இதுபோல் தேவையில்லாமல் போராட்டம் நடத்திவருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.

மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
நா.ராஜமுருகன்

ஆனால், காவல்துறை சரியாக விசாரிக்காமல் கைதுசெய்திருப்பதால், மேலதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகப் பேசிவருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் தெரிவித்தனர்.