Published:Updated:

சென்னை: 6 நாள் போராட்டம்! - நாளை நல்லதொரு விடியல் பிறக்குமா ஸ்விக்கி ஊழியர்களுக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்விக்கி ஊழியர்கள்
ஸ்விக்கி ஊழியர்கள் ( வி.ஶ்ரீனிவாசுலு )

தனியார் ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான ஸ்விக்கி, அதன் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தொகை மற்றும் ஊக்கத்தொகையைக் குறைத்த நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சமயத்தில் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் உணவகங்களும் ஒன்று.

ஊரடங்கு
ஊரடங்கு

வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கள் ஆன்லைன் உணவு வாங்குவதைத் தவிர்த்துவந்தனர். இந்தநிலை தொடரவே ஸ்விக்கி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு அளித்துவந்த சம்பளத்தொகை மற்றும் ஊக்கத்தொகையையும் குறைத்தது.

`காய்கறி கடைகள் முதல் ஸ்விக்கி வரை..!’ - தமிழக அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடுகள்

இந்தச் சம்பளக் குறைப்பு நடவடிக்கை, அந்த நிறுவன ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் உழைப்புக்கு நியாயமான ஊதியம் வேண்டும் என்று சென்னையில் கடந்த 13-ம் தேதி முதல் டெலிவரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வளவு சம்பளம் குறைப்பு?

முன்னர் 4 கிலோமீட்டர் தொலைவுக்குள் செய்யப்படும் டெலிவரிக்கு 35 ரூபாய் கொடுக்கப்பட்டது. தற்போது அது குறைக்கப்பட்டு 15 ரூபாயாக வழங்கப்படுகிறது. தினசரி இலக்கை முடித்தால் கொடுக்கப்படும் ஊக்கத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கி வரப்பட்ட 20 வகையான ஊக்கத்தொகைகளைக் குறைத்திருக்கிறது ஸ்விக்கி நிறுவனம்.

ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் போராட்டம்.
ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் போராட்டம்.
வி.ஶ்ரீனிவாசுலு

இது குறித்து ஸ்விக்கி நிறுவன ஊழியர் சண்முகத்திடம் பேசினோம். ``முன்னாடியெல்லாம் ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்கு டெலிவரி பார்த்தா, 200 ரூபாய்க்கு மேல ஊக்கத்தொகை கிடைக்கும். அதோட வாரா வாரம் டார்க்கெட் அண்ட் கஸ்டமர் ரேட்டிங்குக்கு 1,000-2,300 ரூபாய்க்கு மேல் வரும். ஒரு நாளைக்கு குறைஞ்சது 25 டெலிவரியாவது பார்ப்போம். இந்த கொரோனா காலகட்டத்துல அவ்வளவா ஆர்டர் வர்றதில்லை. இதுல கொடுக்குற சம்பளத்தையும் ரொம்ப குறைச்சிட்டாங்க. முன்னாடி ஒரு நாளைக்கு எல்லாச் செலவும் போக 700-800 ரூபாய் கையில நிக்கும். இப்போ பெட்ரோல் செலவெல்லாம் போக 300-400 ரூபாய்தான் கிடைக்குது.

டெலிவரி சார்ஜ், ரெஸ்டாரன்ட் வெயிட்டிங் சார்ஜ், கஸ்டமர் பைண்ட் சார்ஜ்னு ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்னு ஒவ்வொரு டெலிவரிக்கும் 5-6 ரூபாய் வரை கிடைக்கும். இது எல்லாதையும் கட் பண்ணிட்டாங்க. இதையெல்லாம் கேட்டுத்தான் கடந்த ஆறு நாளா போராட்டம் பணணினோம். கடைசியா, நேத்து மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன்லவெச்சு பேச்சுவார்த்தை நடத்தினாங்க. எங்களோட பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேத்துறதா சொன்னதுனால நேத்தோட போராட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கோம். நாளைக்குள்ள நல்ல பதில் சொல்றதா சொல்லியிருக்காங்க. நல்லதே நடக்கும்னு நம்புறோம்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ஸ்விக்கி தி.நகர் மண்டல அதிகாரியிடம் பேசியபோது,``ஊழியர்களின் கோரிக்கைகளை மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர்கள் தரப்பிலிருந்து வந்த உயர் அதிகாரி, ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டுச் சென்றிருக்கிறார். அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள்' என்று கூறினார்.

ஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்! #5YearsOfSwiggy

ஸ்விக்கி நிறுவனத்தில் சென்னையில் மட்டும் 7,000 டெலிவரி தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பலர், பட்டதாரிகள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு