Election bannerElection banner
Published:Updated:

பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! - உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள்

சித்தர் உண்ணாவிரதம்
சித்தர் உண்ணாவிரதம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சித்தர் அடியார்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்மிக மக்களும் தமிழார்வளர்களும் எழுப்பி வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறார்கள்.

சித்தர் அடியார்கள் கூறும்போது, ''1,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழ் மொழி வழியிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக குடமுழுக்கு விழாவை சமம்ஸ்கிருத மொழியில் மாற்றி நடத்துவதால் கோயிலின் ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளது.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்
ஈ.ஜெ.நந்தகுமார்

தமிழ்மொழியில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரி பன்னிரண்டாவது சித்தர் சார்பாக இந்து அறநிலையத்துறைக்கும் முதலமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் செவி சாய்க்காமல் சம்ஸ்கிருதத்திலேயே நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ்மொழி வழியில் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட வேண்டும்'' என்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

தமிழார்வளர்கள் மட்டும் வலியுறுத்தி வந்த இக்கோரிக்கையை ஆன்மிக சான்றோர்களும் முன்வைத்து வருகிறார்கள். மதுரை வண்டியூர் வீரராகப் பெருமாள் மந்தையில், சித்தர் பீடாதிபதி ஞாலகுருசித்தர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட சித்தர் அடியார்கள் உண்ணாவிரதம் இருந்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு