Published:Updated:

தரங்கம்பாடி: செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம் நடத்தியது ஏன்?

செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம்

மயிலாடுதுறை அருகே செல்போன் டவர் மீது ஏறி தலைகீழாக நின்றபடி இளைஞர் நூதன போராட்டம் நடத்த, இளைஞருக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மீட்டுத் தரக் கோரி செல்போன் டவர் மீது ஏறி தலைகீழாக நின்றபடி அந்தப் பகுதியைச்  சேர்ந்த இளைஞர் கதிரவன் நேற்று (12.07.2022) போராட்டத்தில் ஈடுபட்டார். .

செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம்
செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம்

தங்கள் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் தனிப் பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம் எனப் பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கதிரவன்  என்பவர் செல்போன் டவர் மீது ஏறி கோரிக்கை மனுமீது மாலை அணிவித்து மூன்று மணி நேரத்துக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொறையார் போலீஸார் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இளைஞருக்கு ஆதரவாக அந்தப் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சீர்காழி டி.எஸ்.பி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் மற்றும் துறை அதிகாரிகள் கைப்பட எழுதிக் கொடுத்ததன் பேரில் போராட்டத்தை இளைஞர் கதிரவன் மற்றும் பொதுமக்கள் கைவிட்டனர்.

செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம்
செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம்

இளைஞர் கதிரவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதே இளைஞர் கடந்த மே மாத இறுதியில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி ஆற்றில் இறங்கி தலைகீழாக நின்றபடி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.