Published:Updated:

`மாவட்ட தலைநகருக்கே புதுச்சேரியைக் கடந்துதான் போகணும்!' - வலுக்கும் மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

`மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 25 ஆண்டுக்கால கோரிக்கையாகும்!’

protest
protest ( prasanna venkatesh )

மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, அனைத்து சங்கங்களும் பொதுமக்களும் நான்கு திசைகளிலிருந்து ஊர்வலமாக வந்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.

protest
protest
prasanna venkatesh

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கப் பிரமுகர் ஆறுபாதி கல்யாணம், மயிலாடுதுறையை ஏன் தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.

`மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 25 ஆண்டுக்கால கோரிக்கையாகும். நாகை மாவட்ட தலைநகரைச் சென்றடைய இப்பகுதி மக்கள் புதுச்சேரியைக் கடந்து போகவேண்டியிருக்கிறது. 1866-ல் மயிலாடுதுறை, சேலம் நகராட்சிகள் உருவாகின. இன்று சேலம், மாநகராட்சியாக இருக்கிறது. ஆனால், மயிலாடுதுறை மட்டும் அப்படியே நகராட்சியாகவே இருக்கிறது. சுமார் 6 லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட அரியலூர், பெரம்பலூர் போன்றவை தனி மாவட்டங்களாகிவிட்டன. சுமார் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மயிலாடுதுறை, ஒரு மாவட்டத் தலைநகராக இருக்க முழுத் தகுதி இருந்தும் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது. 273 வருவாய் கிராமங்கள், 241 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள், 5 ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 4 வட்டங்கள், 3 சட்டமன்றத் தொகுதிகள் எனப் பரந்துவிரிந்துள்ள மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக்கவேண்டியது அவசியமாகும். மிகவும் பின்தங்கிய பகுதியான மயிலாடுதுறை, மாவட்டத் தலைநகராக மாறினால், ஒரு மாவட்ட மருத்துவமனை அமையும். ஒரு மருத்துவக் கல்லூரி அமையும்.

protest
protest
prasanna venkatesh
`மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

ஒரு பொறியியல் கல்லூரி அமையும். கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை அமைந்து, இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவர். நிர்வாக ரீதியாகவும் அரசின் செயல் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும். சாதாரண ஊராட்சியாக இருந்த கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்கும்போது, 150 ஆண்டுகள் கடந்த நகராட்சியாக விளங்கும் மயிலாடுதுறையை ஏன் தனி மாவட்டமாக அறிவிக்ககூடாது..? அறவழியில் உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி, கடையடைப்பு, பாதயாத்திரை என அனைத்து வகையிலும் எங்கள் உணர்வை அரசுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, அரசு இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறையை உடனடியாக தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.