தேங்காய் விலை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் தஞ்சாவூர் மாவட்ட தென்னை விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலம் தேங்காய்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் `தமிழக அரசு, தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும், செயல்படாமல் கிடக்கும் தென்னை வணிக வளாகத்தை உடனே செயல்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்த விவசாயிகள் இதனை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் விதமாக விவசாயிகள் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வாயிலில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுன்னதாக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்திய ஒன்றிய அரசே தடை செய் தடை செய், பாமாயில் கொள்முதல் செய்வதை தடை செய், வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யாதே விவசாயிகளிடமிருந்து தேங்காயைக் கொள்முதல் செய். மூடிக்கிடக்கும் தென்னை வணிக வளாகத்தை செயல்படுத்து. தமிழக அரசே தென்னை விவசாயிகளைக் காப்பாற்று, தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து தேங்காயை நேரடியாகக் கொமுதல் செய்' என்று கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து விவசாயி சுந்தர.விமல்நாதன் கூறுகையில், ``தமிழகத்தில் இருக்கின்ற தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு தேங்காய் விலை கடும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இதை இந்திய ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. வெளி நாடுகளிலிருந்து பாமாயில் கொள்முதல் செய்து இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தியாகின்ற தேங்காய்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும். தமிழக அரசு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலும் தேங்காய் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தென்னை விவசாயி வீரசேனன் பேசுகையில், ``டெல்டா மாவட்டத்தைப் பொறுத்தவரை நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகிறோம். கஜா புயலுக்கு முன்பு வரை விவசாயிகளின் எல்லா நல்லது கெட்டதுக்கும் இந்த தேங்காய் மூலம் கிடைத்த வருமானம்தான் பயன்பட்டு வந்தது. கஜா புயல் வீசியபோது ஒரு கோடி தென்னை மரங்கள் சாய்ந்தன. அதன் பிறகு, மிஞ்சி நின்ற தென்னை மரங்களைத் தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து கஷ்டப்பட்டுக் காப்பாற்றி வளர்த்து ஆளாக்கி தற்போது காய்க்கின்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு ஒரு தேங்காய் ரூ. 8-க்கு விற்பனை ஆகிறது. தேங்காய் பறிக்க, அதைப் பொறுக்க என செலவு போக ஒரு தேங்காய் மூலம் ரூ.5 மட்டுமே விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. தேங்காயினை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்வதற்காக பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் 20 எக்கர் நிலத்தில் ரூ. 8 கோடி செலவில் அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகம் 11 வருடங்களாக செயல்படாமல் மூடிக் கிடக்கு.
கருணாநிதி முதல்வராக இருக்கும்போது திறக்கப்பட்ட தென்னை வணிக வளாகம் செயல்படாமல் இருப்பதை ஸ்டாலின் வந்து பார்வையிட்டார். ஆனால், ஒரு வருடம் ஆன பிறகும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தென்னை வணிக வளாகத் தெழிற்சாலையை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வதற்காகத்தான் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்தினோம்'' என்றார்.