Published:Updated:

உடல்நிலை சரியில்லை - சரணடைய அவகாசம் கோரும் ராஜகோபால்!

எம்.குமரேசன்

20 ஆண்டுகள் கழித்து ராஜகோபாலுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜகோபால்
ராஜகோபால்

பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சரணடையவில்லை. சரணடைவதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

ஜீவஜோதி
ஜீவஜோதி

பிரின்ஸ் சாந்த குமார் கொலை வழக்கில் சரவண பவன் ஹோட்டல் அதிபரின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்திடம் சரணடைய 100 நாள்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, ஜூலை 7-ம் தேதி அவர் சரணடைய வேண்டும். ஆனால், நீதிமன்றத்திடம் ராஜகோபால் சரணடையவில்லை. சென்னை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் ராஜகோபால் இருப்பதாக சொல்லப்படுகிறது. தன் உடல் நிலையைக் காரணம் காட்டி சரணடைவதற்கு கூடுதல் அவகாசம் கோர அவர் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய ராஜகோபால் முயன்றார். ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 2001-ம் ஆண்டு அவரை ராஜகோபால் கூலிப்படையினரை வைத்து கொலை செய்தார்.

ராஜகோபால்
ராஜகோபால்

20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. தற்போதுதான், உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்துள்ளது.