Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 21 - காஷ்மீரி புலாவ்... ஹெல்தி கொழுக்கட்டை... சாமை பிரியாணி...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

- சுகுனரோஷிணி

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் விஜயன் ராமசாமி
செஃப் விஜயன் ராமசாமி
செஃப் விஜயன் ராமசாமி

ஹோட்டலில் ‘காஷ்மீரி புலாவ்’ சாப்பிடும்போது லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கிறது. வீட்டில் தயாரிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்க வேண்டுமா?

காஷ்மீரி புலாவைப் பொறுத்தவரையில் ‘ஸ்வீட் ஸ்பைசஸ்’ என்று சொல்லக்கூடிய ஏலக்காய், குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி இவையெல்லாம் பயன்படுத்தப்படும். காஷ்மீரி புலாவில் சேர்க்கக்கூடிய டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸில் இருக்கக்கூடிய இனிப்புதான் புலாவுக்கு இனிப்புச் சுவையைக் கொடுக்கின்றன. பேரீச்சை, பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை, அத்திப்பழம் போன்ற பழவகைகளைச் சேர்த்துச் செய்வதுதான் காஷ்மீரி புலாவ். அந்த இனிப்பே போதும் என்பதால் தனியாக சர்க்கரை சேர்க்க வேண்டாம்.

சமையல் சந்தேகங்கள் 21 - காஷ்மீரி புலாவ்... ஹெல்தி கொழுக்கட்டை... சாமை பிரியாணி...
சமையல் சந்தேகங்கள் 21 - காஷ்மீரி புலாவ்... ஹெல்தி கொழுக்கட்டை... சாமை பிரியாணி...

சிறுதானியங்களைக் குழந்தைகளின் உணவாக மாற்றுவது எப்படி?

குதிரைவாலி, தினை, வரகு, சாமை, பனிவரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை தினந்தோறும் நம் சமையலில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. இட்லி தயாரிக்கும்போது அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். உளுந்து அதே அளவு பயன்படுத்தலாம். குழிப்பணியாரம் தயாரிக்க வரகு அரிசியைப் பயன்படுத்தலாம். கேழ்வரகு மாவில் வெல்லம் சேர்த்து புட்டு செய்யலாம். சாமை அரிசியில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து பிரியாணி தயாரிக்கலாம். குதிரைவாலி தானியத்தில் பாயசம், தயிர்சாதம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இப்படி தினம்தோறும் அரிசிக்குப் பதிலாக சிறுதானியத் தைப் பயன்படுத்தி வந்தால், நம் முன்னோர்கள்போல் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.

சமையல் சந்தேகங்கள் 21 - காஷ்மீரி புலாவ்... ஹெல்தி கொழுக்கட்டை... சாமை பிரியாணி...

குழந்தைகள் விரும்பும் வகையில் ஹெல்தியான கொழுக்கட்டை தயாரிப்பது எப்படி?

கொழுக்கட்டை தயாரிக்கும்போது எப்போதும் வறுத்த அரிசி மாவையே பயன் படுத்துவோம். குழந்தைகளுக்கு ஹெல்தியான கொழுக்கட்டை தயாரிக்க வேண்டுமெனில் கேழ்வரகு மாவு பயன்படுத்தலாம். அதில் பூரணம் வைத்து வழக்கம்போல கொழுக் கட்டை தயாரிக்கலாம். கொழுக்கட்டையில் பயன்படுத்தும் பூரணத்தையும் குழந்தை களுக்கேற்றபடி ஹெல்தியாக மாற்றலாம். தேங்காய்ப்பூரணம் தயாரிக்கும்போது வெல்லத்துக்குப் பதிலாக பனைவெல்லம் (கருப்பட்டி), பருப்பு வகைகள் சேர்த்துச் செய்து கொடுக்கலாம். பருப்புப்பூரணம் தயாரிக்கும்போது தோலுடன் உள்ள முழு பாசிப்பருப்பு சேர்த்தால் நார்ச்சத்து மிகுதியாகக் கிடைக்கும். ‘மோதக அச்சுகள்’ பல வடிவங்களில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில் கொழுக்கட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.

சமையல் சந்தேகங்கள் 21 - காஷ்மீரி புலாவ்... ஹெல்தி கொழுக்கட்டை... சாமை பிரியாணி...

நெல்லிக்காயை ஊறுகாய் தவிர்த்து, வேறு எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம்?

வைட்டமின்-சி சத்து அதிகமுள்ள நெல்லிக்காயைப் பச்சையாகவே தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம். இப்போது தேன் நெல்லிக்காயைப் பரவலாக எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். நெல்லிக் காயை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. நெல்லிக்காயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி வேகவைத்து தயிருடன் சேர்த்து பச்சடியாகப் பயன்படுத்தலாம். ஏகாதசி அடுத்து வரும் துவாதசியன்று பல காய்கறிகளைச் சேர்த்து சாம்பார் வைப் பார்கள். அப்போது அவற்றுடன் நெல்லிக் காயையும் சேர்த்துக்கொள்வார்கள். இப்படி யும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்.