Published:Updated:

சுவையான ஃபில்டர் காபி... திக்கான காரக்குழம்பு... சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்கள் - 24 - சுகுனரோஷிணி

சுவையான ஃபில்டர் காபி... திக்கான காரக்குழம்பு... சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

சமையல் சந்தேகங்கள் - 24 - சுகுனரோஷிணி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் பழனிமுருகன்

சுவையான ஃபில்டர் காபி...
திக்கான காரக்குழம்பு...
சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

தவலை வடை செய்யும் முறையைச் சொல்லுங்களேன்...

- சித்ரா ராமசாமி, அரியலூர்

தவலை வடை, அடை இரண்டுக்குமே அடிப்படை ரெசிப்பி ஒன்றுதான். பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தலா 50 கிராம் அளவு எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம். ஐந்து காய்ந்த மிளகாய், தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயம் ஆகியவை சேர்த்துக் கொரகொரப்பாக ரவை போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், இலை அல்லது பட்டர் ஷீட்டில் மாவை வடையாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுத்தால், தவலை வடை ரெடி. இதே மாவில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுத் தளர்த்தி, அடையாகவும் வார்க்கலாம்.

சுவையான ஃபில்டர் காபி...
திக்கான காரக்குழம்பு...
சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...
சுவையான ஃபில்டர் காபி...
திக்கான காரக்குழம்பு...
சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

ஃபில்டர் காபி எப்படித் தயார் செய்ய வேண்டும்?

- நாகலட்சுமி கேசவன், கோவை

ஃபில்டர் காபிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் பால் அதிக கொழுப்புச்சத்து உள்ளதாக இருக்க வேண்டும். காபித்தூளில் சிக்கரி 80-க்கு 20 என்ற விகிதத்தில் இருப்பது சுவையைக் கூட்டும். சிக்கரி கலக்காத காபித் தூள் என்றால், ஒருமுறை தான் டிகாக்‌ஷன் தயாரிக்க முடியும். சிக்கரி கலந்திருந்தால் மற்றுமொருமுறை தயாரிக்கலாம்.

ஃபில்டரில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, அதன்மேல் நான்கு டேபிள்ஸ்பூன் காபித்தூள் சேர்த்து, 200 மில்லி கொதிக்கும் தண்ணீரைவிட்டால் பத்து நிமிடங்களில் காபி டிகாக்‌ஷன் தயாராகிவிடும். இதில் காய்ச்சிய பாலைச் சேர்த்தால், சுவையான ஃபில்டர் காபி தயார். பாலை முதல் கொதியிலேயே இறக்கிவிட வேண்டும். 120 மில்லி பாலுக்கு 30 மில்லி டிகாக்‌ஷன் என்ற விகிதத்தில் கலந்து கொண்டால் காபி சுவையாக இருக்கும்.

சுவையான ஃபில்டர் காபி...
திக்கான காரக்குழம்பு...
சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

காரக்குழம்பு தயாரிக்கும்போது தேங்காய், முந்திரிப் பருப்பு சேர்க்காமல் குழம்பு திக்காகவும் சுவையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்?

- கௌரி மனோகரி, சேலம்

காரக்குழம்பு திக்காக இருப்பதற்கு அதற்கென தனியாக மசாலாத்தூள் அரைத்துக்கொள்வது நல்லது. தேவையான அளவு மிளகு, தனியா, சோம்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மற்றும் பச்சரிசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சூடான வாணலியில் பொன் வறுவலாக வறுத்து அரைத்து வைத்துக்கொண்டு காரக்குழம்பு தயாரித்தால் திக்காக சுவையாக இருக்கும்.

புளிக்கரைசல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மட்டும் சேர்த்து காரக்குழம்பு வைத்தால், நீர்த்துப்போய்தான் இருக்கும். சுவையும் நன்றாக இருக்காது.

பிரியாணியில் உப்பு குறைவாக இருந்தால் எப்படிச் சரிசெய்வது?

-கே.நளினி, சென்னை - 23

கால் டம்ளர் வெந்நீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரியாணிமீது லேசாகத் தெளித்து நன்றாகக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து தம் போட்டு சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பிரியாணியில் உப்பு ஏறிவிடும். இதற்கு அரிசியின் வேக்காடு மிகவும் சரியாக இருக்க வேண்டும். சாதம் குழைந்து போயிருந்தால் இப்படிச் செய்வது கடினம்.

சுவையான ஃபில்டர் காபி...
திக்கான காரக்குழம்பு...
சூப்பரான ஸ்டஃப்டு கத்திரிக்காய்...

ஸ்டஃப்டு கத்திரிக்காய் குழம்பு எப்படித் தயாரிப்பது?

- ஐஸ்வர்யா கார்த்திக், ஆரணி

`ஸ்டஃப்டு பிரிஞ்சால்' எனப்படும் இந்த ரெசிப்பி, ஆந்திரா பக்கம் மிகவும் பிரபலம்.

அதைச் செய்யத் தேவையானவை: கத்திரிக்காய் - 5, பெரிய வெங்காயம் - 5, சிறிய வெங்காயம் - 10, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி-பூண்டு விழுது - தேவை யான அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை- 2 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய்- 2 டேபிள்ஸ்பூன், தனியா- ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு. இவற்றை லேசாக எண்ணெய்விட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

கத்திரிக்காயை நான்காகக் கீறி தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை கத்திரிக்காய்களில் ஸ்டஃப் செய்துகொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து தாளித்து அதில் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, நறுக்கிவைத்துள்ள மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வெந்ததும் மசாலா ஸ்டஃப் செய்து வைத்துள்ள கத்திரிக்காய்களைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூன்று நிமிடங்களுக்கு மூடிபோட்டு வேக வைக்கவும். பிறகு கத்திரிக்காயை புரட்டிப்போட்டு மறுபடியும் வேகவைக்கவும் ஆறு நிமிடங்களில் கத்திரிக்காய் நன்றாக வெந்துவிடும்.

சூடான சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் இந்த ஸ்டஃப்டு கத்திரிக்காய் சூப்பரான சைடிஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism