Published:Updated:

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

- சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

- சுகுன ரோஷிணி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்
சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் சுந்தரம்
 சுந்தரம்
சுந்தரம்
சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தயிர், மோர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தயிரும் மோரும் புளிக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

- டி.மங்கை, கடலூர்

சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி, லேசாகத் தட்டி, தயிரில் போட்டு வைத்தால், நல்ல வாசனையுடன் புளிக்காமல் இருக்கும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

ரச வடை தயாரிக்கும்போது வடை ரசத்தில் மிதந்துகொண்டே இருப்பதுடன், முழுமையாக ஊறாமல் மொறுமொறுப்பாகவே இருப்பது ஏன்? இதை எப்படித் தவிர்ப்பது?

- புஷ்பா மனோகரன், காஞ்சிபுரம்

உளுந்து வடை தயாரித்ததும் ஆறவைத்து, சிறிது நேரம் சாதாரண தண்ணீரில் போட்டு எடுக்கவும். அதை இரண்டு கரண்டிகளின் இடையில் வைத்து தண்ணீரைப் பிழிந்து வடித்துவிட்டு ரசத்தில் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால், ரசம் எளிதாக வடையுடன் சேர்ந்து ஊறி மிருதுவாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

சாம்பார், குருமா, கிரேவி ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் எப்படி சரி செய்யலாம்?

- டி.மாலா, செங்கல்பட்டு

சாம்பார், குருமா, கிரேவி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால், ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்தால், காரமும் குறையும், ருசியும் கூடும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

பனீரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும்போது, அது மஞ்சள் நிறமாவதைத் தடுப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?

- பாக்யலட்சுமி கேசவன், திண்டிவனம்

பிளாஸ்டிக் கவரில் வைக்காமல் ஒரு வெள்ளைத்துணியில், வினிகர் கலந்த நீரைத் தெளித்து, அதில் பனீரை வைத்து ஃபிரிட்ஜில் வைத்தால், நிறம் மாறாமல் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

தேங்காயை உடைத்துப் பயன்படுத்தியதும் மீதி மூடியை ஃபிரிட்ஜில் வைக்கிறோம். அப்படி வைக்கும்போது தேங்காய் பிசுபிசுப்பாகி விடுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

- கே.எம்.கீதா, சேலம்

தேங்காயை உடைத்தவுடன் நன்றாகக் கழுவி, ஒரு டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். பிசுபிசுப்பாகாமல் இருக்கும். ஃபிரிட்ஜை பராமரிப்பது முக்கியமான விஷயம் என்றால், அதைவிட முக்கியம் அதை சரியாகப் பயன்படுத்துவது. ஃபிரிட்ஜின் உள்ளே பொருள்களை வைக்கும்போது காய்கறிக் கடைகளில் வாங்கி வந்த நிலையிலேயே வைக்கக் கூடாது. நன்றாகக் கழுவி சுத்தம் செய்து மெல்லிய துணியால் துடைத்து சிறிய சிறிய பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் போட்டு வைக்க வேண்டும். பூக்கள், இறைச்சி, அசைவ உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை ஃபிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

வீட்டிலேயே வெஜிடேரியன் மயோனைஸ் தயாரிக்க முடியுமா?

- பி.வெண்ணிலா, அரவக்குறிச்சி

அரை கப் பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறு எடுத்துக் கொள்ளவும். கால் கப் சமையல் எண்ணெயில் நான்கு பூண்டுப் பற்களை ஒன்றிரண்டாகத் தட்டிப்போட்டு வதக்கிக்கொள்ளவும். இத்துடன் பால் கலவையை ஒரு மிக்ஸியில் சேர்த்து, அரைத்து எடுத்தால், சுவையான வெஜ் மயோனைஸ் தயாராகிவிடும்.

சமையல் சந்தேகங்கள்: 27 - மிருதுவான ரச வடை... நிறம் மாறாத பனீர்... உடையாத குலோப்ஜாமுன்...

குலோப்ஜாமுன் தயாரிக்கும்போது சர்க்கரைப்பாகில் போட்டதும், சில உருண்டைகள் உடைந்து போகின்றன. எதனால் இப்படி ஆகிறது?

- மேக்டலின், செஞ்சி

சர்க்கரைப்பாகு காய்ச்சியதும் அதை இன்னொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவைக்கவும். பாகு ஆறிய பிறகு குலோப்ஜாமுன் உருண்டைகளைச் சேர்த்தால் உடையாமலிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism