என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

செம ஈஸி... செம டேஸ்ட்டி - சில்லி சாஸ் - #HowToMake

சில்லி சாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சில்லி சாஸ்

#Utility

சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ... தொட்டுக்கொள்ள ஊறுகாய் கட்டாயம் வேண்டும் என்கிற கூட்டம் உண்டு.

ஃப்ரைடு ரைஸோ... பீட்சாவோ... சாண்ட்விச்சோ... சமோசாவோ... எதுவானாலும் டொமேட்டோ சாஸும் சில்லி சாஸும் மயோயனைஸும் வேண்டும் சிலருக்கு. கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது. தவிர வருடக்கணக்கில் கெடாமலிருக்க இவற்றில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்கள் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தலாம். இவையெல்லாம் வீட்டில் செய்யவே முடியாதவை அல்ல. கடைகளில் வாங்குவதைவிட குறைவான செலவில், கெமிக்கல் இல்லாமல் சூப்பர் டேஸ்ட்டில் ஆரோக்கியமாகத் தயாரிக்கலாம். அப்படிச் சில அயிட்டங்களின் செய்முறைகள் சொல்கிறார் சமையற்கலை நிபுணர் மெனுராணி செல்லம்.

செம ஈஸி...  செம டேஸ்ட்டி - சில்லி சாஸ் - #HowToMake

சில்லி சாஸ்

கால் கிலோ பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி சிவப்பு மிளகாய், தேவையான அளவு கல் உப்பு, 50 கிராம் இஞ்சி, 10 பூண்டு பற்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடி கட்டவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், கால் கப் வினிகர், விருப்பப் பட்டால் சிட்டிகை மோனோ சோடியம் குளூட்டமேட், சேர்க்கவும்.

சோடியம் பென்ஸோயெட் என்கிற ப்ரிசர்வேட்டிவ் சேர்த்தால் சாஸ் மாதக் கணக்கில் கெடாமலிருக்கும். வீட்டிலேயே தயாரிப்பது என முடிவு செய்துவிட்டால் அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாகச் செய்து பயன்படுத்துவதுதான் சரி.

மொத்தமாகத்தான் செய்து வைப்பேன் என்பவர்கள், சோடியம் பென்ஸோயெட் சேர்க்கலாம்.

கால் கப் வெதுவெதுப்பான நீரில், மூன்றில் ஒரு டீஸ்பூன் சோடியம் பென்ஸோயெட்டைக் கரைக்கவும். இது ஐந்து கப் விழுதுக்கான அளவு. இதை சாஸில் சேர்த்துவிட்டால் ஆறு மாதங்கள்வரை கெடாமல் இருக்கும். சில்லி சாஸைக் கொதிக்கவைக்கத் தேவை யில்லை.