Published:Updated:

சிறுதானியங்களில் கேக், பிரௌனி, பீட்சா... - விஷ்ணுப்ரியாவின் ஆரோக்கிய முயற்சி!

விஷ்ணுப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ணுப்ரியா

2015-ல இருந்து நான் கேக் பண்ணினாலும், 2018-க்கு அப்பறம்தான் கோதுமை, ராகினு புது முயற்சிகளை ஆரம்பிச்சேன்

சிறுதானியங்களில் கேக், பிரௌனி, பீட்சா... - விஷ்ணுப்ரியாவின் ஆரோக்கிய முயற்சி!

2015-ல இருந்து நான் கேக் பண்ணினாலும், 2018-க்கு அப்பறம்தான் கோதுமை, ராகினு புது முயற்சிகளை ஆரம்பிச்சேன்

Published:Updated:
விஷ்ணுப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ணுப்ரியா

‘`உடம்புக்குக் கெடுதல் இல்லாத நல்ல ஸ்நாக்ஸா நாமே செஞ்சு சாப்பிடணும்னு எல்லாருக்குமே மனசுல ஓரமா ஓர் எண்ணம் ஓடிட்டேதான் இருக்கும். எனக்கும் அப்படி யிருந்த எண்ணம்தான், என் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பிச்சப்போ செயல் வடிவம் பெற்றுச்சு. இப்போ சிறுதானியங்கள்ல பிரெட், கேக், பிரௌனி, பீட்சானு என் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கிறதோட, அதை தொழிலாவும் மாற்றி, பேக்கிங் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கேன்” - கோதுமை பீட்சா வின் தோற்றமும் மணமும் நமக்கு ஆசை காட்ட, கலகலவெனப் பேச ஆரம்பிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த விஷ்ணுப்ரியா.

‘`சொந்த ஊரு சென்னை. பொறியியல் பட்டதாரி. கல்யாணத்துக்கு அப்புறம் கணவர் விஜயகுமாருடன் லண்டன் போனப்ப, ஏற்கெனவே எனக்கு ஆர்வம் இருந்த பேக்கிங்ல இன்னும் நிறைய வெரைட்டிகள் பண்ண ஆரம்பிச்சேன். ஆனாலும், என் பையன் அருள்மொழிவர்மன் பிறந்தப்போ, அவனுக்கு கேக், பீட்சானு ஜங்க் ஃபுட் கொடுக்கும்போதெல் லாம் கவலையா இருக்கும். பிறகு கணவரோட வந்து அவரோட சொந்த ஊரான திருச்சியில் செட்டில் ஆனதுக்கு அப்புறம், என் ரெண் டாவது பொண்ணு கயல்விழி பிறந்தா. அவளுக்கு எட்டு மாசம் ஆனப்போ, ஓமம் பிஸ்கட் கொடுக்க ஆசைப்பட்டு வாங்கினேன். ஆனா, அதுலேயும் மைதா, வெள்ளை சர்க் கரைனுதான் சேர்த்திருந்தாங்க. நிறைய கடை கள்ல போய், கோதுமையும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து செஞ்சி தர முடியுமானு கேட்டேன். வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. நானே செய்ய முடிவெடுத்தேன்’’ என்பவர் கோதுமை, ராகி, நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, பசு நெய், வெண்ணெய், நிறத்துக்கு பழங்கள் என பேக்கிங் களத்தில் இறங்கியிருக்கிறார்.

சிறுதானியங்களில் கேக், பிரௌனி, பீட்சா... - விஷ்ணுப்ரியாவின் ஆரோக்கிய முயற்சி!

‘`முதல்ல ஓமம் பிஸ்கட்தான் செஞ்சேன். கோதுமைல எந்தவிதமான செயற்கைப் பொருள்களோ, சுவையூட்டியோ சேர்க்காத தால சுவையில் முழுமையா வந்ததுனு சொல்ல முடியாது. ஆனாலும் குழந்தைக்கு ஊட்டி விட்டப்போ சாப்பிட்டுச்சு. அப்போதான், வெள்ளை சர்க்கரை, மைதானு நாமதான் குழந்தைகளோட நாக்கை பழக்குறோம். ஆரோக்கியமானதை ஆரம்பத்தில் இருந்தே கொடுத்தா அவங்க சாப்பிடுவாங்கனு புரிஞ்சது. கோதுமை, ராகி, நாட்டுச்சர்க்கரைல கேக் செஞ்சு, வெண்ணெய், பனங்கற்கண்டு சேர்ந்து க்ரீம் செஞ்சேன். முளைகட்டின சிறுதானியங்கள்ல பிஸ்கட் செஞ்சேன். ராகி மாவு, நாட்டுச்சர்க்கரை, வெல்லம் சேர்த்து பிரௌனி செஞ்சேன். கோதுமை மாவு, ராகி மாவை சேர்த்து பீட்சா செஞ்சேன். இப்படி நான் செஞ்ச கேக், பிரெட், பீட்சா, பிரௌனி எல்லாமே ஆரோக்கியமா மட்டு மில்ல, சுவையாவும் இருந்தது, என் பிள்ளைங்க சப்புக் கொட்டிச் சாப்பிட்டாங்க’’ என்பவர், இதை பிசினஸ் ஆக முன்னெடுத்தது பற்றி தொடர்ந்தார்.

‘`2015-ல இருந்து நான் கேக் பண்ணினாலும், 2018-க்கு அப்பறம்தான் கோதுமை, ராகினு புது முயற்சிகளை ஆரம்பிச்சேன். அதையெல்லாம் ஏதோ டைரி எழுதுற மாதிரிதான் என்னோட சமூக வலை தளங்கள்ல போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பலரும் தங்களுக்கும் செய்து தரச் சொல்லிக் கேட்க, என்னோட ‘ழகரம் பேக்கர்ஸ்’ உருவானது. ஆனா, சோஷியல் மீடியா ஆர்டர்கள் மட்டுமே ஜெயிக்க போதாது என்பதால, ஆரம்பத்தில் தொழில் டல்லாதான் போச்சு. ஆனா, என் கேக்கை ஒருமுறை சாப்பிட்டவங்க மற்றவங்களுக்குப் பரிந் துரைக்கிறதை தவிர்க்க முடியாத அளவுக்கு நான் தரமாவும் சுவையாவும் செஞ்சதால, இலவச வாய்வழி விளம்பரம் கிடைக்க ஆரம்பிச்சது. நாள்கள் ஆக, ஆக இத்தனை பேர் ஆரோக்கியத்தை தேடி வருவாங்கனு நான் நினைச்சுப் பார்க்கல. இன்னொரு விஷயம்... நான் செய்ற கேக் வகைகள் எல்லாமே முட்டை சேர்க் காதவை’’ என்றவர், குக்கரி க்ளாஸ்களிலும் பிஸி.

சிறுதானியங்களில் கேக், பிரௌனி, பீட்சா... - விஷ்ணுப்ரியாவின் ஆரோக்கிய முயற்சி!

‘`கேக் ஆர்டர்களுக்கு இணையா, அதை செய்யக் கத்துக்கொடுக்கச் சொல்லி வர்றவங்க இருக்காங்க. இந்த மாதிரி கத்துக்கொடுக்க ஆட்களோ, வீடியோவோ இல்லாததால நமக்கு அவ்ளோ வரவேற்பு. குறிப்பிட்டு சொல்லணும்னா, என்னோட ராகி பிரௌனியை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி, ‘என் தாத்தா, பாட்டிக்கு நான் இதை செஞ்சு கொடுத்தா அவ்ளோ ஹேப்பி ஆவாங்க, கத்துத்தர்றீங்களா?’னு கேட்டு, க்ளாஸ் வந்தது எனக்கே சர்ப்ரைஸ். இதுவரை கிட்டத்தட்ட 500 பேர் வரை கத்துக் கொடுத்துருப்பேன். அவங்கள்ல பலர் வீட்டுக்கும், வீட்டிலிருந்தே பிசினஸா வும் இப்போ இதை பண்ணிட்டு இருக் காங்க’’ என்று சொல்லும் விஷ்ணு ப்ரியா, இப்போது இதில் தான் மாதம் 30,000 வரை வருமானம் பார்ப்பதாகக் கூறுகிறார்.

சிறுதானியங்களில் கேக், பிரௌனி, பீட்சா... - விஷ்ணுப்ரியாவின் ஆரோக்கிய முயற்சி!

‘`என் குடும்பம்தான் குவாலிட்டி கன்ட்ரோல் டீம். இவங்க எல்லாரும் என்னோட சின்னச் சின்ன குறைகளை யும் சரி பண்ணவெச்சு சூப்பர் டேஸ்ட் டுக்குக் கொண்டுவந்துடுவாங்க. பொறி யியல் பட்டதாரியான நான் போட்டித் தேர்வுக்குப் படிச்சு, அப்புறம் ஆரோக் கியத்தை தேடி, அதில் எனக்குனு இப்படி ஓர் அடை யாளம் உருவாக்கிக் கிட்டது நானே எதிர்பார்க்காதது. உங்க அடையாளத்தை நீங்க தேட ஆரம்பிங்க’’ - சக பெண்களுக்கு ஹை ஃபைவ் சொல்கிறார் விஷ்ணுப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism