லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

அதிரசம் செயதல்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிரசம் செயதல்

போன வருஷம் அதிரச மாவை எண்ணெயில போட்டவுடனே பிரிஞ்சு ஓடிப்போச்சு. மாவை உருண்டை பிடிச்சு, மைதாவுல முக்கி அதிரச போண்டா சுட்டுட்டேன்.’

இளம் பிரவுன் நிறத்துலதான் இருக்கணும். ஒரு செகண்டு அதிகமா வெந்துட்டாலும் தீய்ஞ்ச நிறம் வந்துடும்.

கையில எடுத்தா பொல பொலன்னு உதிரவும் கூடாது; அதுக்காக சுத்தியல் வெச்சு உடைக்கிற மாதிரியும் இருக்கக்கூடாது.

வாயில போட்டா மெத்துன்னு இருக்கணும்; அதே நேரம் நல்லா வெந்தும் இருக்கணும்.

பாகு வெல்லம்தான் கரெக்ட்... அதுவும் தங்க நிறத்துக்கும் பிர வுன் நிறத்துக்கும் நடுவுல ஒரு நிறத் துல வெல்லம் இருந்தாதான் அதிரசம் பார்க்க நல்லா இருக் கும்.

பாகு அரை கம்பிப் பதம் அதிகமா போனா லும் வாய்ல போட்டு ஊறவெச்சுதான் சாப்பிட ணும்.

மாவை ரெண்டு நாள் மூடிபோட்டு ஊற வெச்சே ஆகணும்.

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

‘ம்... இந்த அதிரசத்துக்கு இவ்ளோ ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸா’னு பதறுதுல. நெஜம்தாங்க... ‘முன்ன போனா முட்டும்; பின்ன போனா உதைக்கும்’கிற பயத்தினாலேயே பல பேர் அதிரசம் செய்யறதை விட்டுட்டு, கடையில ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கெல்லாம் வாய்ப்பில்லாத அந்தக் காலத்துல, தீபாவளி வந்தா அதிரசம் செஞ்சே ஆகணும். அதுலேயும் நோம்பு எடுக்கிறவங்க வீட்ல வெல்ல அதிரசம், சர்க்கரை அதிரசம் ரெண்டும் செய்வாங்க.

கைப்பக்குவம்னு சொல்வாங்க இல்லையா..? அது, அதிரசத் துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க. ஒவ்வொரு கிராமத்துலேயும் யாராவது ஒரு பாட்டிக்கு அதிரசம் செய்ற கைப்பக்குவம் இருக் கும். தீபாவளி நெருங்க நெருங்க ‘என் வீட்டுக்கு வாங்க; எங்க வீட்டுக்கு வாங்க’னு இந்தப் பாட்டிக்கு மவுசு கூடிப் போயிடும். பாட்டியும், ‘ஒத்த மனுஷி, ஊருக்கே பாகு எடுக்கணும்னா எப்புடிடி’ன்னு கெத்தா சலிச்சுக்கிட்டே வீடு வீடாப் போயி பாகெடுத்து, கையோட பச்சரிசி மாவையும் கொட்டி, கட்டித்தட்டாமக் கிளறி, பழைய வேட்டித்துணியால வேடு கட்டிக் கொடுத்துட்டு வருவாங்க. பாட்டிங்ககிட்ட இருந்து அம்மாங்ககிட்ட கைமாறினப்போவும் அதிரசத்துக்கான மெனக்கெடல்கள் ஓரளவுக்கு மவுசாதான் இருந் துச்சு. குறிப்பா, மாமியாருங்க கோலோச்சுற வீடுகள்ல, ‘ஆடலும் பாடலும் பார்த்தே ஆகணும்’னு சிவகார்த்திகேயன், சூரி மாதிரி அடம்பிடிச்சாவது மருமகள்களை அதிரசம் சுட வெச்சிட்டிருந்தாங்க. தனிக்குடித்தனங்கள் அதிரசத்துக்குக்கிட்ட இருந்து ஓரளவுக்கு குடும்பத்தலைவிகளைக் காப்பாத்த, ஸ்வீட் ஸ்டால் புண்ணியவான்கள் சுத்தமான நெய்ல அதிரசம் சுட்டு அத்தனை அம்மாக்களையும் இதுநாள் வரைக்கும் காப் பாத்திட்டு இருக்காங்க.

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

அதிரசத்தோட அருமை, பெருமைகளைப்பத்தி தெரிஞ்சுக்கணும்னா, தீபாவளி நெருக்கத்துல நீங்க ரைஸ் மில்லுக்கு கண்டிப்பா போகணும்ங்க. மாவு அரைக்கிறதுக்கு காத்திருக்கிற நேரத்துல அங்கதான் பல அதிரசக் கதைகள் பரிமாறப்படும்.

‘லட்டுல, மைசூர்பாக்குல எல்லாம் கடலை மாவு, சர்க்கரைன்னு தனித்தனியா ஃபீல் பண்ணவே முடி யாது. அப்படி ஃபீல் பண்ணிட்டா அதை பச்சை வாசனை அடிக்குதுன்னு சொல்லிடுவோம். ஆனா, அதிரசத்துல பச்சரிசியோட வாசம், வெல்லத்தோட வாசம், ஏலக்காய் வாசம்னு ஒவ்வொண்ணுத்தையும் தனித்தனியா ஃபீல் பண்ண முடியும். நாக்கை மயக்குற ருசின்னா அது அதிரசம்தான்...’

‘போன தீபாவளிக்கு அதிரச மாவை ஊற வெக் கிறதுக்கு டப்பர்வேர்ல போட்டு ஃப்ரிட்ஜுக்குள்ள வெச்சிட்டேன். அப்படி செய்யக்கூடாதுன்னு எங்கம்மா ஒரே திட்டு. பாத்திரத்துல போட்டு வெள்ளைத்துணியாலதான் மூடி வெக்கணுமாம். காத்து உள்ளே போகணுமாம்; ஆனா, போக முடியாதுங்கிற மாதிரியும் மூடணுமாம். அது எப்படின்னுதான் புரியலை...’

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

‘என் மாமியார் அதிரசம் சுடுற அன்னிக்கு எலெக்‌ஷன் ரிசல்ட் வர்ற மாதிரியே எஃபெக்ட் கொடுப்பாங்க. மாவைத் தட்டி எண்ணெயில போட்டவுடனே மாவு திரி திரியா பிரிஞ்சு போச்சுன்னா அத்தனை உழைப்பும் வீணாப்போச்சுன்னு டெபாசிட் போன எம்.எல்.ஏ மாதிரி அடுத்த தீபாவளி வரைக்கும் புலம்புவாங்க.’

‘எங்க அம்மாவுக்கு இப்பவும் அவங்க பொறந்த வீட்ல இருந்து தீபாவளி சீர் அனுப்புறாங்க. அதுல நம்ம கையகலத்துக்கு வெல்ல அதிரசமும், சர்க்கரை அதிரசமும் வரும். யானை பாதம் மாதிரி எவ்ளோ மெத்துன்னு இருக்கு பாரு என் பொறந்த வீட்டு அதிரசம்னு எங்கம்மா பெருமையடிச்சிக்கும்.’

‘வெல்ல அதிரசம் ஒரு ருசின்னா சர்க்கரை அதிரசம் வேற ருசி. நான் சர்க்கரை அதிரச ஸ்பெஷலிஸ்ட். ஆப்பம் மாதிரி ஒரு பக்கம் மட்டுமே சர்க்கரை அதிரசத்தை வேகவிட்டு எடுத்தா, இன்னொரு பக்கம் மல்லிப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கும். அதிரசம் னாலே எங்கயாவது ஓர் ஓரத்துல கூடுதலா வெந்து மொறுமொறுப்பா இருக்கணும். அதிரசத் தோட நடுவுல கொஞ்சம் வேக்காடு குறைஞ்சு மாவும் பாகும் நாக்குல லேசா ஒட்டுச்சுன்னா அதுதான் சொர்க்கம்.’

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

‘என் பாட்டியும் அம்மாவும் செஞ்ச மாதிரி என்னால அதிரசம் செய்ய முடியலை. அதான், மாவு அரைச்சு மாமியார்கிட்ட கொடுக்கிறதோட நீ சவுக்கியமா, நான் சவுக்கியம்னு தள்ளி நின்னுக்க ஆரம்பிச்சிட்டேன்.’

‘போன வருஷம் அதிரச மாவை எண்ணெயில போட்டவுடனே பிரிஞ்சு ஓடிப்போச்சு. மாவை உருண்டை பிடிச்சு, மைதாவுல முக்கி அதிரச போண்டா சுட்டுட்டேன்.’

இப்படி ரைஸ் மில்லுல மாவு நெடியோட பேச ஆரம்பிக்கிற அதிரசக்கதைகள், பாகு எடுக்கிறப்போ, எண்ணெய் சட்டியை அடுப்புல வெக்கிறப்போ, சுட்டு வெச்ச அதிரசம் தீர்ந்துபோற வரைக்கும் தொடரும்...

டீக்கடை அதிரசம் முதல் சீர்வரிசை அதிரசம் வரை...

டீக்கடையில விக்கிற நடுவுல ஓட்டைப்போட்ட அதி ரசத்துக்கே எச்சி ஊறுற அதிரச வெறியர்கள்ல ஆரம் பிச்சு, எங்கம்மா சுடுற அதிரசம்தான் உலகத்துலேயே பெஸ்ட்டுனு காலரைத் தூக்கி விட்டுக்கிற அதிரச கொடுப்பினையாளர்கள் வரைக்கும் எல்லார்கிட்டேயும் கட்டாயம் ஓர் அதிரசக்கதையிருக்கும். அதுதான் அதிரசத்தோட சிறப்பு.