Published:Updated:

மழைநீரில் ஸ்வீட்ஸ்...

மழைநீரில் ஸ்வீட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
மழைநீரில் ஸ்வீட்ஸ்...

அசத்தும் 140 வருட பாரம்பர்ய இனிப்பகம்!

மழைநீரில் ஸ்வீட்ஸ்...

அசத்தும் 140 வருட பாரம்பர்ய இனிப்பகம்!

Published:Updated:
மழைநீரில் ஸ்வீட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
மழைநீரில் ஸ்வீட்ஸ்...

‘`அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு வறட்சி காலத்துலதான் மழை நீரை சேகரிக்க முடி வெடுத்தோம். அப்போ தான், நம்ம கடை ஸ்வீட்ஸை, சேகரிச்ச மழைத்தண்ணீரையே பயன்படுத்தி செஞ்சா என்னன்னு ஒரு யோசனை வந்தது. செஞ்சு பார்த்தோம். மனசுக்குத் திருப்தியா இருந்தது. வாடிக்கையாளர்கள்கிட்ட அதை சொன்னப்போ, ‘அட, அதான் டேஸ்ட்டு எக்ஸ்ட்ராவா தூக்குதா’னு வரவேற்புக் கொடுத்தாங்க. 140 வருஷங்களா ஸ்வீட் ஸ்டால் நடத்திட்டு வந்தாலும், மழைத் தண்ணியில ஸ்வீட் செய்றதே இப்ப எங்க அடையாளமாகி இருக்குறது சந்தோஷம்’’ - இனிக்கப் பேசுகிறார் ராகுல்.

 ராகுல்
ராகுல்

திருவாரூர் மாவட்டம், அண்ணா சாலையில் அமைந்துள்ளது ‘நா.கோ.சிவராம ராவ் ஸ்வீட்ஸ் கடை’. இங்கு தயாரிக்கப்படும் இனிப்புகள் அனைத்தும் மழைநீரைப் பயன் படுத்தியே செய்யப்படுகின்றன என்பதை உள்ளூர் மக்களும் சுற்றுப்புற மக்களும் ஆர்வத்துடன் குறிப்பிடுகின்றனர். கடை யின் அடித்தளத்தில் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து அதில் மழைநீரை சேகரித்திருக்கும் கடையின் உரிமையாளர் ராகுல் தொடர்ந்து பேசினார்.

‘`கிட்டத்தட்ட 140 வருஷங்களா எங்க கடை திருவாரூர்ல இயங்கிட்டு வருது. எங்க பரம்பரையைச் சேர்ந்த சிவராம ராவ்தான் இந்தக் கடையை முதல்ல தொடங்கினாரு. அவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியும்கூட. நாட்டுக் காகச் சிறைக்குப் போனவரு. வெள்ளைக்காரங்க காலத்திலிருந்தே எங்க கடை திருவாரூர்ல ரொம்பப் பிரபலம். இந்தக் கடையோட ஐந்தாவது தலைமுறை உரிமை யாளர் நான். இந்த எல்லா பாரம்பர்யத்தை யும் விட இப்போ எங்க கடையோட ஹை லைட்டா பார்க்கப்படுறது மழைநீர் ஸ்வீட்ஸ்தான்’’ என்றவர், மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்ததைப் பற்றிப் பகிர்ந்தார்...

மழைநீரில் ஸ்வீட்ஸ்...

‘`பொதுவாவே எங்க குடும்பத்தினர் இயற்கை சார்ந்த விஷயங்கள்ல அதிக ஆர்வம் செலுத்துவோம். கடந்த 2017-ம் வருஷம் எங்க கடையை விரிவுபடுத் தினப்போ, எங்க ஊர்ல ரொம்ப வறட்சி. நிலத்தடி நீர்மட்டம் எல்லாம் ரொம்பக் குறைஞ்சிடுச்சு. திருவாரூர்ல இருந்த அஞ்சு வேலி அளவுள்ள கமலாலயம் குளமே வத்திப்போற அளவுக்கு வறட்சி. நல்ல குடிதண்ணீர் கிடைக்க ரொம்பக் கஷ்டப் பட்டோம். அப்போதான், எங்களுக்கு மழை நீரை சேமிக்கலாம்ன்ற ஐடியா தோணுச்சு.

எங்க அப்பாவோட நண்பர் ‘மழைநீர்’ வரதராஜன் ஐயாகிட்ட, மழைநீரை சேமிக்கிறதைப் பற்றிய வழிமுறைகளை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். ஐயாவே ப்ளானும் போட்டுக் கொடுத்தாங்க. அதன்படி, முதல்ல எட்டடி ஆழத்துக்கு கடையின் தரைத்தளத்தில குழி வெட்டி னோம். குழியின் நாலு பக்கமும் நீர் புகாத கான்கிரீட் கலவையால் ஆன சுவர்களை எழுப்பினோம். பிறகு, காற்று, வெளிச்சம் போகாத அளவுக்கு நல்ல அடர்த்தியான தெர்மாகோல் வெச்சு, நான்கு சுவர்கள்லயும் ஒட்டிட்டு, மறுபடியும் நீர் புகாத ரெண்டாவது அடுக்கு கான்கிரீட் சுவரை எழுப்பினோம். தரையி மட்டுமில்லாம தொட்டியின் நாலு சுவர்கள்லயும் டைல்ஸ் பதிச்சோம்’’ என்றவர், மழைத் தண்ணீர் இந்தத் தொட்டிக்கு வந்து சேகரிக்கப் படுவதற்கு முன்னதாகச் சுத்திகரிக்கப்படுவதற்குக் கட்டப் பட்ட தொட்டி பற்றிச் சொன்னார்.

‘`மழை பெய்யும்போது, எங்க கடை மேற்கூரை வழியா மழை தண்ணியெல்லாம் முதல்ல, இந்தச் சின்ன அளவிலான சுத்திகரிப்புத் தொட்டிக்குத்தான் வரும். அந்தத் தொட்டி முழுக்க பெருவாட்டு மணல், நிலக்கரி மாதிரியான இயற்கை சார்ந்த பொருள்களைப் போட்டு வெச்சிருக்கோம். இவை யெல்லாம் மழைத் தண்ணீரை சுத்தம் பண்ணும். பிறகுதான், அந்தத் தண்ணீர் கடைக்குக் கீழ உள்ள பெரிய சேகரிப்புத் தொட்டிக்கு வந்து சேரும். கிட்டத்தட்ட 12,000 லிட்டர் மழைத் தண்ணீரை சேமிக்குற அளவுக்கு அதோட கொள்ளளவு இருக்கு’’ என்றவர் இதில் ஸ்வீட்ஸ் செய்வது பற்றி சொல்லும்போது இன்னும் சுவாரஸ்யமாகிறார்.

மழைநீரில் ஸ்வீட்ஸ்...

‘`பொதுவா மழைத்தண்ணியில சோறாக்கினாலே ருசியா இருக்கும்னு சொல்லுவாங்க. அதனால, எங்க கடையில பண்ணுற ஸ்வீட்ஸுக்கு மழைத்தண்ணியைப் பயன்படுத்தலாம்னு முடிவெடுத்தோம். சுவையும் தரமும் கூடுனதை உணர்ந்தோம். சில காரப் பலகாரங் களுக்கு ஊறவைக்குற தண்ணியை கீழ ஊத்த வேண்டி வரலாம் என்பதால அதுக்கு நாங்க மழைத் தண்ணீரை பயன்படுத்த மாட்டோம். மற்றபடி இனிப்பு, காரம் சேர்மானங்களுக்கு எல்லாம் மழைத்தண்ணீர்தான். வாய்ப்பு இருக்குறவங்க உங்க வீட்டுல மழைத் தண்ணியை சுத்திகரிச்சு சேமிச்சு சமைச்சுப் பாருங்க... நான் சொல்ற அந்த ருசியையும் தரத்தையும் நீங்களும் உணர்வீங்க’’ என்றார் பெருமையுடன்.

‘சிவராமராவ் ஸ்வீட்ஸ் கடை’ வாடிக்கையாளர்கள், ‘`மழைத்தண்ணியில செய்யுறதால இந்தக் கடை ஸ்வீட்ஸ் எல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும், ரொம்ப நாள் கெட்டுப்போகாமலும் இருக்கும். குறிப்பா, இந்தக் கடை அல்வா நெய்யும் முந்திரியுமா தொண்டையில வழுக்கி வயித்துக்குப் போறப்போ அப்படி இருக்கும்’’ என்கிறார்கள் சப்புக்கொட்டி.

மழை ருசி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism