Published:Updated:

டிப்ஸ்

டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்

பாயசம் மற்ற இனிப்புகள் செய்யும்போது ஏலக்காய் பொடியை முதலில் சேர்க்காமல் அடுப்பை அணைத்து...

டிப்ஸ்

கேக் செய்ய குக்கிங் சாக்லேட்டை உருக்கும்போது டபுள் பாய்லர் (Double boiler) முறையில் உருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் மைக்ரோ வேவ் அவனில் 30 நொடிகள் வைத்து எடுக்க வேண்டும். அதிக சூடு, சாக்லேட்டை தீய்த்துவிடும். அதேபோல, சாக்லேட்டில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

இந்த இதழில் இடம்பெற்றுள்ள டிப்ஸை வழங்கியவர்: ஜானகி அஸாரியா, சமையற்கலை நிபுணர்

டிப்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேக்கில் க்ரீம் ஃபிராஸ்ட்டிங் (Cream frosting) செய்யும்போது கேக் நன்றாக ஆறி குளிர்ந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4, 5 மணி நேரம் கழித்துத்தான் ஐஸிங் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐஸிங் உருகி சரியாக வராது.

டிப்ஸ்

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது மாவில் வெந்நீர் ஊற்றிப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு செய்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

டிப்ஸ்

பர்ஃபி போன்ற ஸ்வீட் செய்யும்போது கடைசி வரை அடுப்பில் வைத்துக் கிளறாமல், நன்கு கெட்டியாகி ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, அவ்வப்போது கிளறி, அப்படியே கடாயில் விட்டு விடவும். ஆற ஆற தானாக கெட்டியாகி விடும். பிறகு தட்டில் கொட்டி, வில்லைகள் போடலாம். இப்படிச் செய்யும்போது, பர்ஃபி சாஃப்ட்டாக நாவில் கரையும் பதத்தில் வரும்.

டிப்ஸ்

வீட்டில் பூந்தி லட்டு செய்யும்போது, பாகு சரியான பதத்தில் இல்லையென்றால் லட்டு பிடிக்க வராது. இதற்கு அரை கப் சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, கெட்டிப் பாகாகச் செய்து, பூந்தியில் ஊற்றிக் கிளறினால் சுலபமாக லட்டு பிடித்துவிடலாம்.

டிப்ஸ்

தேன் குழல், முறுக்கு, ரிப்பன் பக்கோடா போன்றவை செய்யும்போது அடுப்புத் தீயைக் கூட்டிக் குறைத்துச் செய்யாமல், நிதானமான தீயில் வைத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் சீரான பக்குவத்தில் வெந்து கரகரப்பாக வரும்.

டிப்ஸ்

கிரேவி, சைடிஷ் செய்யும்போது உப்பு அதிகமாகிவிட்டால் அரை கப் பாலும் அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலந்தால் சுவையும் மிக நன்றாக இருக்கும், உப்பும் சரியாகிவிடும்.

டிப்ஸ்

கிரேவி, சூப் செய்யும்போது ரெஸ்டாரன்ட்டில் பரிமாறுவது போன்ற சுவையை வரவழைக்க ஃபிரெஷ் க்ரீம் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு பாலும் ஒரு டீஸ்பூன் வெண்ணெயும் சேர்த்தால் போதும்.

டிப்ஸ்

பாயசம் மற்ற இனிப்புகள் செய்யும்போது ஏலக்காய் பொடியை முதலில் சேர்க்காமல் அடுப்பை அணைத்து கீழே இறக்கும்போது சேர்த்தால் அதிக வாசனையாக இருக்கும்.