வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (04/12/2017)

கடைசி தொடர்பு:10:10 (04/12/2017)

விஷால் இன்று வேட்புமனுத் தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஷால், இன்று வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.

விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும், டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்க உள்ளனர். மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு, விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, (இன்று) விஷால் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீபகாலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை விஷால் தைரியமாகத் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.

 விஷால், சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சமாதிகளுக்கு செல்வார் என்றும் அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல்செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.